திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் வைகுண்ட ஏகாதசி திருவிழாவையொட்டி பகல் பத்து ஸ்ரீ நம்பெருமாள் உற்சவம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் அவரது மனைவி அனுராதா ஆகியோர் சாமி தரிசனம் செய்ய இன்று வந்தார். ரெங்கா கோபுரம் வழியாக சென்று கருடாழ்வார் சந்நிதி, மூலவர் ரெங்கநாதர், தாயார், சக்கரத்தாழ்வார், ராமானுஜர் ஆகிய சந்நிதிகளில் சாமி தரிசனம் செய்தார்.

அதனைத்தொடர்ந்து நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் அவர் கூறியதாவது. 

அதிமுக அலுவலகத்தில் கேளிக்கூ கூத்து நடந்து வருகிறது. மேலும் அதிமுகவை பொறுத்த வரை குரங்கு கையில் கிடைத்த பூ மாலை என்கிற நிலை தான் – நீங்களே தொலைக்காட்சியில் பார்த்து இருப்பீர்கள் அதிமுக கட்சி தலைமை அலுவலகத்தில் குண்டர்களை வைத்து தொண்டர்களை … விருப்ப மனு கொடுக்க வந்த போது விரட்டியதை. நான் தூண்டிவிட்டு அவர்களை அங்கு அனுப்பியதாக சிலர் புகார் கூறி இந்தப் பிரச்சினையை திசைத் திருப்பப் பார்க்கிறார்கள். உட்கட்சி கூச்சலை சரி செய்யவே அதிமுக அதற்கு சரியாக உள்ளது – இதில் அவர்கள் எங்கு எதிர்க்கட்சியாக செயல்படுவது? உங்களுக்கும் சசிகலா அம்மையாருக்கும் இடையே கருத்து வேறுபாடு இருப்பதாக அரசியல் விமர்சகர்கள் மற்றும் சமூக வலைதளங்களில் செய்தி பரவுகிறது? இதற்கு நான் பதில் கூற விரும்பவில்லை – அரசியல் விமர்சகர்கள் அந்தந்த நேரத்திற்கு தகுந்தாற்போல் மாறுவார்கள் என்பது அனைவருக்கும் தெரியும். ரஜினி அவர்களை சசிகலா சந்தித்தது : சிறையில் இருந்து வந்த போதே அவரிடம் கூறினேன் – தொலைபேசி வாயிலாக ரஜினியின் உடல் நலம் குறித்து சசிகலா விசாரித்தார், நேற்று நேரில் சென்று சந்தித்து விசாரித்து வந்துள்ளார்.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் மக்கள் எங்களை ஏற்றுக் கொள்வார்கள் என்கிற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது.தமிழக முதல்வர் வந்த உடனே நீட் தேரவு ரத்து என்பதை ஒரே கையெழுத்தில் முடித்து விடுவேன் என்று கூறினார்? அதேபோல் சிறுபான்மையின மக்களின் காவலர்கள் என்று கூறிக்கொண்டு திமுக 7 பேர் விடுதலையில் என்ன பேசினார்கள் என்பது உங்களுக்கு தெரியும். திமுகவின் சுய ரூபத்தை கொஞ்சம் கொஞ்சமாக வெளிப்படுத்தி வருகின்றனர். ஒ.பி.எஸ் ஈ.பி.எஸ் அவர்களை வேறு யாரும் இயக்குகிறார்களா என்கிற கேள்விக்கு …? காலம் அதனை உங்களுக்கு விளக்கும் என்றார்.எங்களுடைய இலக்கே அம்மாவுடைய கட்சியை மீட்டெடுப்பதே.இந்த பேட்டியின் போது அம்மா மக்கள் முன்னேற்ற கழக மாநில பொருளாளர் மனோகரன் மற்றும் கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published.