திருச்சி தெற்கு மாவட்ட திமுக அலுவலகத்தில் இன்று காலை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியை தாராநல்லூர் இப்பகுதியை சேர்ந்தஸ்ரீ அம்மன் சிலம்ப கலைக்கூடத்தின் வீரர் வீராங்கனைகள் நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.

அந்த மனுவில் கூறியிருப்பதாவது.

திருச்சி 15வது வார்டு பகுதிக்குட்பட்ட தாராநல்லூர் பகுதியில் ஸ்ரீ அம்மன் சிலம்ப கூடம் ( இணைப்பு) திருச்சி மாவட்ட சிலம்ப அசோசியேஷன் (அங்கீகாரம்) தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் சிலம்ப விளையாட்டை அரசு அங்கீகாரம் வழங்குதல் சிலம்ப வீரர்களுக்கு இட ஒதுக்கீடு அடிப்படையில் வேலை வாய்ப்பு மேலும் அண்ணா விளையாட்டு அரங்கில் சிலம்பம் விளையாடுவதற்கு மைதானம் அமைத்து தருதல் அவர்களுக்கு என்று தனி அறை வசதி செய்து தருதல் ஆகிய திட்டங்களுக்கு நன்றி தெரிவிக்கவும் கடந்த 47 வருடங்களாக தாரா நல்லூர் பகுதியில் இந்த சிலம்ப கூடம் செயல்பட்டு வருகிறது.

இந்த சிலம்பக் கூடத்தின் பயிற்சியாளராக கலை நன்மணி முத்துக்கிருஷ்ணன் என்பவர் கடந்த பல வருடங்களாக இப்பகுதியில் உள்ள மூட்டை தூக்கும் தொழிலாளர்கள் மற்றும் ஏழை எளிய குடும்பத்தைச் சேர்ந்த சிலம்ப வீரர் வீராங்கனைகளுக்கு தற்காப்பு கலலைகளை கற்று கொடுத்து வருகிறார். மேலும் இந்த சிலம்ப கூடத்தில் சிலம்பம், வாள் வீச்சு, குத்து பயிற்சி, வேல் கம்பு, மான் கொம்பு, சுருள் வீச்சு, கத்தி சண்டை, அலங்கார சிலம்பம் உள்ளிட்ட பயிற்சியை அளித்து வருகிறார் இந்நிலையில் இந்த மாணவ மாணவிகளுக்கு பயிற்சி அளிக்க போதிய இடம் இல்லாததால் இன்று காலை பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சந்தித்து சிலம்ப வீரர்களுக்கு நிரந்தர பயிற்சி கூடம் அமைத்து தரக்கோரி கோரிக்கை மனு அளித்தனர் முன்னதாக சிலம்ப வீர வீராங்கனைகளை தனித்திறமைகளை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் முன்னிலையில் செய்து காட்டினர். இதில் மணிகண்டன், முத்துமாரி மேலும் சிலம்பப் வீரர்கள் வீராங்கனைகள் நூற்றுக்கும் மேற்பட்டோர் மனுவை கொடுத்து சிலம்ப விளையாட்டின் மூலம் மரியாதை செய்தனர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *