திருச்சி இந்திரா கணேசன் கல்லூரியில் பாஜக சார்பில் மகாகவி பாரதியார் நூற்றாண்டு நினைவு நாளை முன்னிட்டு கல்லூரி மாணவர்களுக்கான மாநில அளவிலான பேச்சுப் போட்டி இன்று நடைபெற்றது. இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக பாஜக முன்னாள் தேசிய தலைவர் எச்.ராஜா கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். மேலும் சிறப்பாக பேசிய மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி கௌரவித்தார்.

 

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த எச்.ராஜா

 

உச்ச நீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்கிய பிறகு இவர்கள் ஏற்றும் தீர்மானத்திற்கு எந்த அதிகாரமும் கிடையாது. ஸ்டாலின் அவர்களின் நடவடிக்கை வன்மையாக கண்டிக்கத்தக்கது. இது தேசிய ஒருமைப்பாட்டிற்கு விரோதமான தீய செயல் என்றும் இன்று நீட் தேர்வு பயத்தால் தற்கொலை செய்துகொண்ட தனுஷின் மரணத்திற்கு திமுகவும், திமுகவின் இலவச இணைப்புகளும் காரணம். எந்த மாநிலத்திலும் ஸ்டாலின் போல் பொறுப்பற்ற முதல்வரை பார்க்க முடியாது‌. இவரது அரசியல் பின்னணியே பிரிவினைவாத பிண்ணனி என்றார்.

 

7-6-2021 சென்னை உயர்நீதிமன்றம் நீதிபதி மகாலிங்கம்,நீதிபதி ஆதிகேசவன் ஆக இரண்டு பேரும் 75 கட்டளைகள் மாநில அரசுக்கு கொடுத்துள்ளார்கள். அதை எல்லாமே 12 வாரங்களுக்குள் முடிக்க வேண்டும் என்றார். ஆனால் அது சொல்லப்பட்டு 13 வாரங்கள் ஆகின்றது. அதில் எதுவுமே நிறைவேற்றவில்லை. நான் ஒரு லட்சம் ஏக்கர் நிலம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது என்றேன். அதற்கு ஆதாரம் கொடுத்தால் மீட்கிறேன் என்று சேகர் பாபு-வா,செயல்பாபு -வா சொன்னார்.

 

சென்னையிலிருந்து காஞ்சிபுரம் செல்லும் வழியில் உள்ள பாப்பா சத்திரம் என்ற ஊரில் காசி விஸ்வநாதர்க்கு சொந்தமாக 177 ஏக்கர்‌ நிலைத்தை சேகர் பாபு – வா, செயல் பாபு-வா 24 மணி நேரத்தில் மீட்டால் இந்து அறநிலைத்துறை பற்றி இனிமேல் பேசமாட்டேன் என்று தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *