திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட காஜாமலை பகுதியில் பக்கிரிசாமி, கார்த்திகேயன், ரெங்கநாதன் உள்ளிட்ட 4 பேர் சாப்ட்வேர் நிறுவனம் நடத்தி வந்தனர். கடந்த 2012-ம் ஆண்டு இவர்கள் கனரா வங்கியில் ரூ. 22 கோடி கடன் வாங்கினர். பின்னர் 2019-ம் ஆண்டு நிறுவனத்தை மூடிவிட்டு தலைமறைவாகி விட்டனர். இதனையடுத்து வங்கியில் பெற்ற கடனுக்காக மாவட்ட கலெக்டர் பிரதீப்குமார் உத்தரவின்படி காஜாமலை பகுதியில் உள்ள அவர்களுக்கு சொந்தமான ரூ. 44 லட்சம் மதிப்புள்ள வீட்டை மண்டல துணை தாசில்தார் பிரேம்குமார், கனரா வங்கி ஊழியர்கள் ஜப்தி செய்ய சென்றனர்.

அவர்கள் மீது, தி.மு.க., பகுதி செயலர் காஜாமலை விஜய் தூண்டுதலின் பேரில் 15 பேர் துணை தாசில்தார் பிரேம்குமார் மற்றும் வங்கி அதிகாரிகளை கொலை வெறி தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த தாக்குதலை கண்டித்து, வருவாய்துறை அலுவலர் சங்கங்களின் கூட்டமைப்பின் சார்பில், திருச்சி கலெக்டர் அலுவலகம் முன்பு 2 நாட்கள் பணி புறக்கணிப்பு போராட்டம் நடந்தது. இருந்த போதும் காவல்துறையினர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை மேலும் அமைச்சருக்கு நெருக்கமான தி.மு.க., நிர்வாகிகள் என்பதால், குற்றத்தில் ஈடுப்பட்ட நபர்களை, போலீசார் கைது செய்யாமல் காலம் தாழ்த்தி வந்தனர்.

இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக இதுவரை காவல்துறை தரப்பில் 9 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர் இந்நிலையில் அரசு அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்தியவர்கள் கண்டித்து பாஜக மாவட்ட தலைவர் ராஜசேகரன் தலைமையில் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே வாயில் கருப்பு துணி கட்டிக்கொண்டு போராட்டம் நடத்த முயற்சி செய்தனர் அவர்களை தடுத்து நிறுத்தினர் . அதனைத் தொடர்ந்து பாஜக நிர்வாகிகள் அருகில் இருந்த டீக்கடையில் டி அருந்தி கொண்டிருந்த பொழுது அவர்களிடம் காவல்துறையினர் அனுமதி இல்லாமல் போராட்டம் நடத்தியதற்காக உங்களை கைது செய்கிறோம் என கூறி அவர்களை கைது செய்யும் பணியில் ஈடுபட்டனர் அப்பொழுது பாஜக நிர்வாகிகளுக்கும் காவல் துறைக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது நிலையில் முப்பது நிமிடங்களுக்கு மேலாக பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் பாஜகவினர் கைது ஆகாமல் கலைந்து சென்றனர்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *