திருச்சி காஜா மலையில் உள்ள பாரதிதாசன் பல்கலைக் கழக வளாகத்தில் தமிழகத்தில் முதன்முறையாக கொரோனா நோயாளிகளுக்கான 200 படுக்கை வசதிகளுடன் கூடிய அரசு சித்தா கொரோனா புத்துணர்வு மையம் ஆரம்பிக்கப்பட்டது . இப்புத்துணர்வு மையத்தை நகர்ப்புற வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை அமைச்சர் கே.என் . நேரு மற்றும் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திறந்து வைத்தனர் .

பயனாளியின் அறிகுறிகளுக்கேற்ப சித்த மருந்துகளான தாளிசாதி சூரணம் , அமுக்கரா சூரணம் , நெல்லிக்காய் லேகியம் , காய்ச்சலுக்கு பிரம்மானந்த பைரவ மாத்திரை , சளி , இருமலுக்கு தாளிசாதி வடகம் , ஆடாதோடை மணப்பாகு , தலைவலிக்கு நீர்க்கோவை மாத்திரை , பெயின் பாம் , நுகர்வுத் தன்மைக்கு ஓமப்பொட்டணம் , உடல்வலிக்கு விஷ்ணு சக்கர மாத்திரை போன்ற மருந்துகள் கொடுக்கப்பட இருக்கின்றன . மேலும் இவ்வளாகத்தில் மன கவலையைப் போக்க பாரம்பரிய விளையாட்டுகளை நினைவு படுத்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன . பயனாளிகள் கொரோனா மையத்தில் நேரிடையாக அனுமதிக்கப்பட மாட்டாது . அவர்கள் யாரும் சித்தா திருச்சி கி.ஆ.பெ. விஸ்வநாதம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்திற்கு சென்று முறையாக பதிவு பெற்று பின்பு புத்துணர்வு மையத்திற்கு அனைத்து பரிசோதனையின் முடிவுகளை மருத்துவர் பரிந்துரை கடிதத்தை கொரோனா சித்தாகொண்டு எடுத்துக் பயனாளிகளுக்கு வருமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள் .

இந்நிகழ்வில் அருகில் மாவட்ட ஆட்சியர் திவ்ய தர்ஷினி. மாவட்ட வருவாய் அலுவலர் திரு.பழனிக்குமார் மாநகராட்சி ஆணையர் திரு . சிவசுப்ரமணியன் , மாண்புமிகு சட்டமன்ற உறுப்பினர்கள் , மாநகராட்சி தலைமை பொறியாளர் திருமதி அமுதவள்ளி ஆகியோர் கலந்து கொண்டு இவ்விழாவை சிறப்பித்தனர் . நலம் நாட இக்கொரோனா சித்தா புத்துணர்வு மையத்தை பயன்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் திரு . டாக்டர்.எஸ்..காமராஜ் அவர்கள் கேட்டுக் கொள்கிறார் . பாரம்பரிய மருத்துவ த்துடன் இணைந்து அனைவரும் கொரோனா நோயிலிருந்து விடுபட பாடுபடுவோம் . அரசு வழிகாட்டுதலை பின்பற்றுவோம் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்