தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதால் திருச்சியில் இன்று அதிகாலை முதலே பலத்த மழை பெய்து வருகிறது இதனால் சாலைகளின் மழை நீர் பெருக்கெடுத்து ஓடி வருகிறது வாகன ஓட்டிகள் கடும் சிரமத்துக்கு மத்தியில் வாகனங்களை இயக்கி வருகின்றனர்..

இந்நிலையில் திருச்சி மன்னார்புரம் பகுதியில் மழை காரணமாக அரசு 108 ஆம்புலன்ஸ் ஒன்று இயக்க முடியாமல் பெண் ஊழியர்கள் மழையில் நனைந்தபடியே ஆம்புலன்ஸை தள்ளி இயக்க முயற்சி செய்து வந்தனர் .. இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் மக்களின் உயிரைக் காப்பாற்றும் 108 ஆம்புலன்ஸ் சேவை மழைக்காலங்களில் இது போன்று பழுது ஏற்பட்டால் விபத்தில் சிக்குபவர்களுக்கு பெரிதும் பாதிப்பு ஏற்படும், மக்களின் உயிர்காக்கும் வாகனம் என்பதால் அனைத்து மாவட்டத்தில் உள்ள தமிழக அரசின் 108 ஆம்புலன்ஸ் வாகனத்தை பழுது இல்லாமல் பராமரிக்க வேண்டுமென பொதுமக்களும் ,சமூக ஆர்வலர்களும் கோரிக்கை வைத்துள்ளனர்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *