மேகதாதுவில் அணை கட்டக்கூடாது என விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் திருச்சியில் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தினர் பல்வேறு விதமான போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக மேகதாதுவில் அணை கட்டக்கூடாது என்பதை வலியுறுத்தி டெல்லியில் சென்று போராடுவதற்கு இச்சங்கத்தின் மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் 50க்கும் மேற்பட்டோர் அரை நிர்வாணத்துடன், நெற்றியில் நாமம் இட்டு, மனித எலும்புகூடு மற்றும் ஏற்கலப்பை உடன் சென்றனர். இதற்கு அனுமதி மறுத்த காவல்துறையினர் அவர்களை தடுத்து நிறுத்தினர். இதனால் காவல்துறையினருக்கும் விவசாயிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனை அடுத்து திருச்சி – கரூர் சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் மத்திய அரசை கண்டித்தும், மேகதாதுவில் அணை கட்டக்கூடாது வலியுறுத்தி கோஷமிட்டனர்.

பின்னர் மணப்பாறை வீரப்பூரைச் சேர்ந்த விவசாயி ஒருவர் உணர்ச்சிவசப்பட்டு நிர்வாணத்துடன் கண்டன கோஷங்கள் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த சாலை மறியல் போராட்டத்தால் அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து ஏற்பட்டது. நீண்டநேரம் காத்திருந்த வாகன ஓட்டிகள் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் கடந்து செல்ல முயன்ற வாகன ஓட்டிகளை விவசாயிகள் தடுத்து நிறுத்தினர். இதனால் வாகன ஓட்டிகளுக்கும், விவசாயிகளுக்கும் இடையே கடும் வாக்குவாதம் மற்றும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறையினர் அவர்களை தடுத்து நிறுத்தினர். மேலும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளை டெல்லி செல்ல அனுமதிக்க வேண்டும் என காவல்துறையிடம் கேட்டதற்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதனை தொடர்ந்து சாலையில் படுத்து போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளை போலீசார் குண்டு கட்டாக தூக்கி கைது செய்தனர். மேலும் விவசாயிகள் போராட்டத்தால் பொதுமக்கள் பாதிக்கப்படுவதாக வாகன ஓட்டிகள் குற்றம்சாட்டினர். இந்த போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளுடன் வாகன ஓட்டிகள் கடும் வாக்குவாதத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்