கொரோனா மருத்துவப் சிகிச்சை பயன்பாட்டிற்கு தேவைப்படுகின்ற ஆக்சிஜன் உற்பத்தி மையம் திருச்சி தஞ்சை ரோடு புதுக்குடி அருகில் சிக்ஜில்சால் கேஸஸ் பிரைவேட் லிமிடெட் அமைந்துள்ளது. அதை பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

திருச்சி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகள் மற்றும் அருகில் மாவட்ட மருத்துவமனைகளுக்கு தேவையான மருத்துவ ஆக்ஸிஜன் உற்பத்தி மையத்தை பார்வையிட்டு அதன் உற்பத்தி குறித்த. விவரங்களைக் கேட்டறிந்தார். உற்பத்தியின் அளவை அதிகரிப்பதும் குறித்தும் அங்கிருந்த அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இங்கு உற்பத்தி மொத்த கொள்ளளவு 50 மெட்ரிக் டன் ஆகும். மேலும் இங்கு உற்பத்தி செய்யப்படுகிற 100 சதவீத ஆக்சிஜன் அரசு மருத்துவமனைக்கு அனுப்ப படுவதாகவும் அமைச்சரிடம் தெரிவித்தனர். உற்பத்திக்கு எந்தவித இடையூறும் ஏற்படாத வண்ணம் உற்பத்தியை பார்த்துக் கொள்ளவும் அவ்வாறு இடையூறுகள் ஏற்பட்டால் உடனடியாக என்னை தொடர்பு கொள்ளவும் எனவும் கூறினார்
இந்நிகழ்வின் போது மாவட்ட வட்ட வழங்கல் அதிகாரி மற்றும் அரசுத் துறையைச் சார்ந்த அதிகாரிகளும் பிரைவேட் கேஸ் பிளாண்ட் நிறுவன ஊழியர்களும் உடனிருந்தனர்.
அதே போல் திருவெறும்பூர் துவாக்குடியில் அமைந்துள்ள என் ஐ டி தொழில்நுட்ப கல்லூரி வளாகத்தில் கொரோனா நோய் தொற்று தடுப்பு தனிமைப்படுத்தல் அமைய உள்ள முகாம்மை பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பார்வையிட்டார்.
திருச்சி என் ஐ டி வளாகத்தில் சுமார் 500 படுக்கைகளுடன் கூடிய தனிமைப்படுத்தல் முகாம் அமைக்கப்பட்டுள்ளது. முகாமை பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியிடம் அரசு அதிகாரிகள் வளாகத்தில் அமைய உள்ள படுக்கைகள் குறித்தும் இதர வசதிகள் குறித்தும் விளக்கிக் கூறினர் துவாக்குடி நகரமன்ற அலுவலர்கள் மற்றும் தலைமை செயற்குழு உறுப்பினர் கே என் சேகரன் ஒன்றிய கழகச் செயலாளர் கே எஸ் எம் கருணாநிதி துவாக்குடி நகரச் செயலாளர் காயாம்பூ மற்றும் கழக நிர்வாகிகள் அரசுத் துறையைச் சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *