தமிழ் மாநில சமாஜ்வாதி கட்சியின் துவக்க விழா இன்று திருச்சியில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. இந்த துவக்க விழாவில் நிறுவன தலைவர் சிவபெருமாள் யாதவ் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.இந்த கூட்டத்தின் வாயிலாக 11 வகையான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
இது குறித்து நிறுவன தலைவர் சிவபெருமாள் யாதவ் செய்தியாளர்களிடம் கூறுகையில்…
அகிலேஷ் யாதவ் தொடர்ந்து யாதவ சமூகத்தை சேர்ந்த மக்களை புறக்கணிப்பதாகவும் பல்வேறு சஞ்சலங்கள் ஏற்படும் போது அது குறித்த எந்தவித விசாரிப்போம் இல்லாமல் உள்ளார். அதேபோல் ஆடு வளர்ப்போம் நல வாரியம் அமைக்க வேண்டும் என்று நாங்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகிறோம் எனவே அந்த கோரிக்கையை தமிழக முதல்வர் ஏற்க வேண்டும்.
அதேபோல் தமிழகத்தில் உள்ள தனியார் பள்ளிகள் அனைத்தும் ஹிந்தி பாடத்தை விருப்ப படமாக கற்றுக் கொடுக்கும் நிலையில் அரசு பள்ளிகளிலும் இந்தி மொழியை விருப்ப படமாக சேர்க்க வேண்டும்.அதேபோல் 90% சமஸ்கிருதம் கலந்த பெயர்களை தங்களுடைய குழந்தைகளுக்கு பெற்றோர்கள் வைத்துள்ளனர். எனவே தமிழில் பெயர் வைத்துள்ள மாணவர்களுக்கு 5 சதவீத ஊக்க மதிப்பெண் கொடுத்து அவர்களை உற்சாகப்படுத்த வேண்டும். எங்களுடைய மிக முக்கிய கோரிக்கையான சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தி விகிதாச்சார அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்கிட வேண்டும்.
அதேபோல் மக்கள் தொகையை அடிப்படை கணக்கீடாக கொண்டு அரசியல் பிரதிநிதித்துவம் வழங்கிட வேண்டும் என்ற கோரிக்கையை விடுத்துள்ளார். இன்றைய நிலையில் தமிழ் மாநில சமாஜ்வாதி கட்சியின் யாதவர்கள் மட்டுமின்றி பல்வேறு மதங்களையும் ஜாதிகளையும் சேர்ந்த நான்காயிரம் பேர் உறுப்பினர்களாக உள்ளனர். எனவே இன்னும் அதிகப்படியான உறுப்பினர்களை சேர்ப்பதற்கான நடவடிக்கைகள் குறிப்பாக பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க ப்பட்டு இந்த கட்சியில் சேர்க்கப்படுவார்கள் என்றும் தெரிவித்தார்.