ஆட்டோ எப்.சி கட்டண உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடி ஆட்டோ ஓட்டுனர் சங்கம் சார்பில் பிராட்டியூர் பகுதியில் உள்ள ஆர்டிஓ அலுவலகம் முன் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது ஆர்ப்பாட்டத்திற்கு சிஐடி ஆட்டோ சங்கத்தின் மாநகர் மாவட்ட தலைவர் ஜெயபால் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தை விளக்கி மாநகர் மாவட்ட செயலாளர் மணிகண்டன் சிஐடியு புறநகர் மாவட்ட செயலாளர் சிவராஜ் ஆட்டோ சங்கர் புறநகர் மாவட்ட செயலாளர் சம்பத் ஆகியோர் பேசினர்.

இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தின் கோரிக்கைகளாக:- ஆட்டோக்களுக்கு அநியாயமாக உயர்த்தப்பட்ட f.c. கட்டணத்தை திரும்பப் பெற வேண்டும் கால தாமதமான f.c. தினமும் 50 ரூபாய் அபராதம் விதிப்பதை நிறுத்த வேண்டும் 15 வருட பழைய ஆட்டோவிற்கு f.c கட்டணம் பத்து மடங்கு உயர்த்தி அதை திரும்பப் பெற வேண்டும் சட்டவிரோதமாக இயங்கும் பைக் டாக்சி தடை செய்ய வேண்டும்.

 ஆன்லைன் மூலம் அபராதம் விதிப்பதை கைவிட வேண்டும் மோட்டார் வாகன சட்டத்தை தமிழகத்தில் அமல்படுத்த கூடாது என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பிராட்டியூர் ஆர்டிஓ அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் ஆட்டோ சங்க நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்