நாம் தமிழர் கட்சியின் தொழிற்சங்க பேரவை மற்றும் திருச்சி அனைத்து மீட்டர் (தனி) ஆட்டோ ஓட்டுனர் சங்கங்கள் இணைந்து நடத்தும் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு பாராளுமன்ற செயலாளர் வக்கீல் பிரபு தலைமை தாங்கினார்.மாவட்ட செயலாளர் பிரபு முன்னிலை வகித்தார்.
இதில் தொழிற்சங்க பேரவை செயலாளர் சுரேஷ், அப்துல்லாசா ஆகியோர் வாழ்த்தி பேசினர். மேலும் சிறப்பு அழைப்பாளராக மண்டல தலைவர் அன்பு தென்னரசு ,மண்டல செயலாளர் சுரேஷ் ,இணைச் செயலாளர் சிதம்பரம் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர்.
இதில் கடந்த 10 ஆண்டுகளாக உயர்த்தாமல் இருக்கும் மீட்டர் கட்டணத்தை உயர்த்த வேண்டும். புதிய மோட்டார் வாகன சட்டத்தை ரத்து செய்ய வேண்டும். அதிக அபராதம் விதிப்பதை கைவிட வேண்டும்.60 வயதை கடந்த ஓட்டுனர்களுக்கு ஓய்வூதிய வழக்கிட வேண்டும். வீட்டுமனை இல்லாத ஆட்டோ ஓட்டுநர்களுக்கு வீட்டுமனை வழங்க வேண்டும். மீனவர்களுக்கு வழங்குவது போல மானிய விலையில் எரிபொருள் வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.