பெட்ரோல், டீசல் மற்றும் கேஸ் விலை உயர்வை தொடர்ந்து பல்வேறு அமைப்பினர் மற்றும் கட்சியினர் விலை உயர்வை குறைக்க கோரியும், அதனை கட்டுப்படுத்த வலியுறுத்தி ஆர்ப்பாட்டங்கள் மற்றும் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் எஸ்டிடியூ கட்சியின் தொழிற் சங்கத்தின் சார்பில் மாவட்ட தலைவர் முஸ்தபா தலைமையில் திருச்சி மாவட்ட கலெக்டர் சிவராசுவிடம் மனு அளித்தனர்.

 அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:- தமிழக அரசே . உயர்நீதிமன்றத்தின் ஆலோசனைப்படி மீட்டர் கட்டணத்தை உயர்த்தி வழங்கிட வேண்டும், கடந்த 2013 ஆம் ஆண்டு அதிமுக அரசால் ஆட்டோக்களுக்கு மீட்டர் கட்டணமாக மினிமம் ரூ .25 , கிலோமீட்டருக்கு ரூ12 என்று நிர்ணயம் செய்தது. அப்போதைய பெட்ரோல் டீசல் விலை பெட்ரோலுக்கு ரூ .54ம் டீசல்க்கு ரூ36ம் இருந்தது . தொழிற்சங்கங்களால் மீட்டர்கட்டணத்தை உயர்த்தக்கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது . அதன்பின்பு இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை மீட்டர் கட்டணத்தை உயர்த்திக்கொள்ளலாம் என்று 2018 ல் ‘ உயர் நீதிமன்றம் தமிழக அரசுக்கு ஆலோசனை வழங்கியது. ஆனால் இன்றுவரை ஆட்டோக்களுக்கான மீட்டர் கட்டணத்தை உயர்த்தவே இல்லை.

தற்போதைய சூழலில் பெட்ரோல் 111 ரூபாயும் , டீசல் 103 ரூபாயும் விற்பனையாகின்றது. மேலும், வாகன இன்சூரன்ஸ் மற்றும் உதிரிபாகங்களின் விலையும் வாகன புதுப்பித்தல் கட்டணமும் பலமடங்கு உயர்ந்துள்ளது. ஆட்டோக்கள் இயக்குவது மிகவும் சிரமமாக உள்ளது. எனவே, அரசு மினிமம் 40 ரூபாயும் கிலோ மீட்டருக்கு 16 ரூபாயும் நிர்ணயித்து கொடுக்குமாறு தமிழக அரசை கேட்டுக் கொள்கிறோம் என அம்மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்