திருச்சி மாவட்டம் காட்டுப்புத்தூர் அருகேயுள்ள கவரப்பட்டி குயவர் தெருவில் தங்கசாமி மகன் பாலசுப்பிரமணியன் (40) இவரும் இவரது மனைவி சரஸ்வதி (37) தம்பதியினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை பாலசுப்ரமணியன் பவித்திரம் அருகிலுள்ள தனது குலதெய்வம் கோயிலுக்கு சென்றுள்ளார். அன்றைய தினம் பாலசுப்பிரமணியன் மனைவி சரஸ்வதி மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார்.

அப்போது அடையாளம் தெரியாத இரண்டு ஆண்கள் ஒரு பெண் ஆதரவற்ற இல்லத்திற்கு உதவி கேட்டு வந்ததாகவும் அவர்களிடம் தனது கணவர் வீட்டில் இல்லை நீங்கள் செல்லுங்கள் என சரஸ்வதி கூறிவிட்டு வீட்டின் அருகிலுள்ள மாட்டு கொட்டகையில் மாட்டிற்கு தண்ணீர் வைப்பதற்காக சென்று விட்டு சிறிது நேரம் கழித்து வீட்டிற்கு வந்து பார்த்தபோது

பீரோ திறக்கப்பட்டு கிடந்ததை கண்டு அதிர்ச்சிரடைந்து பீரோவை பார்த்தபோது பீரோவில் வைத்திருந்த 5 சவரன் செயின், முக்கால் சவரன் மைனர் செயின், அறை பவுன் மோதிரம், கால் பவுன் தோடுஜிமிக்கி, வெள்ளி கொலுசு இரண்டு செட் மற்றும் ரூ. 3000 பணம் திருடப்பட்டிருந்தது தெரிய வந்தது உடனடியாக தனது கணவருக்கு தகவல் தெரிவித்து,கணவர் கோயிலில் இருந்து வந்தவுடன் காட்டுப்புத்தூர் காவல் நிலையத்தில் பாலசுப்ரமணியன் புகார் அளித்ததின் பேரில் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *