திருச்சி மாவட்டம் நகை அடகு பிடிப்போர் கூட்டமைப்பு துவக்கவிழா திருச்சி பால்பண்ணை அருகே உள்ள வெங்காயம் மண்டியில் நடைபெற்றது.இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநிலத் தலைவர் விக்கிரம ராஜா, மாநில பொதுச் செயலாளர் கோவிந்தராஜீலு ஆகியோர் கலந்து கொண்டார்.

இந்நிகழ்ச்சிக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த மாநில தலைவர் விக்கிரம ராஜா பேசுகையில்…

 தமிழக முதல்வர் பொறுப்பேற்ற போது பணம் நெருக்கடி மற்றும் கொரோனா நெருக்கடி போன்ற காலங்களில் சிறப்பாக பணியாற்றி அதில் வெற்றி பெற்றமைக்கு நம்முடைய பேரமைப்பு சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம். வணிகர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றித் தருவதாக முதல்வர் உறுதி அளித்துள்ளார், அதன் மீது அதிகமாக நம்பிக்கை இருக்கிறது. லஞ்சம் இல்லாத முறை உருவாக்கப்பட வேண்டும். நகை அடகுக் கடைகளை வைத்திருப்போருக்கு ஏற்படும் பிரச்சனைகளை குறித்து அதிகமான தகவல்கள் வந்து கொண்டே இருக்கிறது மேலும் இது குறித்து முதல்வரிடம் எடுத்துரைத்து அதற்குரிய சட்டத்தை வலியுறுத்த இருக்கிறோம். தற்போது ஆயுத பூஜை தீபாவளி உள்ளிட்ட விழாக்கள் வர இருப்பதால் தமிழக அரசு வியாபாரிகளின் நன்மைக்காக கடைகள் ,வணிக வளாகங்கள் உள்ளிட்டவற்றை முழுத் தளர்வுகளுடன் அனுமதி அளிக்க வேண்டும். தற்போது தமிழக அரசு தடுப்பூசி முறையை அமல்படுத்தி உள்ளது வணிகர்கள் தடுப்பூசி போடுவதற்கு 100 சதவீதம் ஒத்துழைப்பு அளிப்போம். சுகாதாரத்துறை அமைச்சர் தற்போது பொது மக்களை காப்பதற்காக ஓடிக்கொண்டிருக்கிறார். ஆன்லைன் வியாபாரம் மோசடியை தடுக்க அரசு வழிவகை செய்யவேண்டும். உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் கடைகளில் சோதனை இடுவதை விட உற்பத்தி செய்யும் இடங்களில் சோதனை செய்வது சரியானது என தெரிவித்தார்…

இந்தக் கூட்டத்தில் நகை அடகு பிடிப்போர் கூட்டமைப்பு பொதுச் செயலாளர் காசி விஸ்வநாதன், மாவட்ட தலைவர் ஸ்ரீதர், மாவட்ட செயலாளர் அன்பழகன் மாவட்ட பொருளாளர் ரவிசங்கர் மற்றும் திருச்சி காந்தி மார்க்கெட் வியாபாரிகள் முன்னேற்ற சங்கத்தின் தலைவர் கமலக்கண்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *