கடலூர் மாவட்டம் கீழ்அருங்குனத்தில் உள்ள கெடிலம் ஆற்றில் குளிக்க சென்ற சிறுமிகள் உட்பட 7 பேரும் நீரில் மூழ்கினர். அதனைத் தொடர்ந்து, 7 பேரும் உயிருக்கு ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டு கடலூர் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

இந்நிலையில்,சிகிச்சை பலனின்றி நீரில் மூழ்கிய இரண்டு சிறுமிகள் மற்றும் 5 பெண்கள் உட்பட 7 பேர் உயிரிழந்துள்ளதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தகவலறிந்து,உடனே கடலூர் மாவட்ட எஸ்பி பச்சையப்பன் சம்பவ இடத்திற்கு வருகை புரிந்துள்ளார். இதனிடையே,கெடிலம் ஆற்றில் மணல் எடுக்கப்பட்டதால் ஆழமான பள்ளத்தில் 7 பேரும் சிக்கி நீரில் மூழ்கி இறந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.இந்த சம்பவம் அப்பகுதியினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *