திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்தில் ரயில்வே பாதுகாப்பு படை பிரிவு போலீசார் இரயில் வழியாக சட்டவிரோத தடை செய்யப்பட்ட பொருட்களின் போக்குவரத்தை கட்டுப்படுத்த வழக்கமான சோதனையில் ஈடுபட்ட பொழுது. நேற்று மயிலாடுதுறை ரயில் எண் 06795னில் வந்த ஜிதேந்திர குமார் என்ற 27 வயது மற்றும் அவரது கூட்டாளியான டெலான் தாஸ் பாகெல், 32 வயது, ஆகியோர் சந்தேகத்திற்கு இடமாக வந்தவர்களை ஆர் பி எஃப் போலீசார் சோதனை செய்தனர்.

அப்போது அவர்களின் பையில் அதிக அளவில் தங்க நகைகள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது‌ அதன் மதிப்பு சுமார் ரூ75லட்சம் 1616.12 கிராம் எடையுள்ள பல்வேறு வகையான ஆபரணங்கள்.இதில் உரிமையாளர் ஏற்கனவே 310.38 கிராம் நகைகளுக்கு மட்டுமே வரி செலுத்தியுள்ளார்.

 

அதற்கு விற்பனைத் துறை 1305.74 கிராம் நகைகளுக்கு ரூ .3,66,232/- ஜிஎஸ்டி வரி விதித்துள்ளது. 60,71,038/-.மேலும் இந்த நகைகளுக்கு அவரிடம் போதுமான ஆவணங்கள் இல்லை. இதுகுறித்து அவர்கள் கூறுகையில் ரமேஷ்குமார் என்பவரின் விற்பனை பிரதிநிதி என்றும், மயிலாடுதுறை மற்றும் கும்பகோணத்தில் உள்ள கடைகளுக்கு சப்ளை செய்வதற்காக நகைகளை எடுத்துச் செல்வதாகவும் கூறினார்கள். இதனையடுத்து அந்த தங்க நகைகளை பறிமுதல் செய்த ரயில்வே போலீசார் மாநில வரி அலுவலர்/மயிலாடுதுறையிடம் ஒப்படைக்கப்பட்டனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *