திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகில் உள்ள ஜோசப் கல்லூரியில் கைப்பந்து போட்டியை பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தொடங்கி வைத்தார். இதனை தொடர்ந்து கல்லூரியில் நடைபெறும் ஸ்மார்ட் கல்வி குறித்த கருத்தரங்கில் ஸ்மார்ட் கல்வி குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி உரையாற்றினார்.

 அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பேசியது.. 

மத்திய அரசுக்கு நாங்கள் வைக்கும் கோரிக்கை என்னவென்றால்.. WiFi வசதிகளை கிராமபுற மாணவர்கள் பயன்பெறும் வகையிலும், அவர்கள் கல்விக்கு மிகவும் பயன் உள்ளதாக இருக்கும் நாங்கள் ஆசைபடுகிறோம். இப்போது கல்வி புரட்சி 4.0 என்ற திட்டத்தை நாம் கொண்டுவருகிறோம் என்றால், மாணவர்களுக்கு பயன் உள்ளதாக இருக்கும். கரும்பலகையில் பாடங்கள் சொல்லி கொடுத்த காலம் போய், ஸ்மார்ட் வகுப்புகள் நடத்தி வருகிறோம். ஆகையால் அதற்கு ஏற்றது போல் இணையதள வசதிகளை மேம்படுத்த வேண்டும். தமிழ்நாட்டில் முதலமைச்சர் அவர்களின் உத்தரவின் அடிப்படையில் 500க்கும் மேற்பட்ட நூலகங்களில் தற்போது இணையதள வசதிகளை மேம்படுத்தியுள்ளோம். ஆகையால் மத்திய அரசும் இணையதள வசதிகளில் கவனம் செலுத்த வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளேன் என்றார்.

தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளுக்காக முதலமைச்சர் பல்வேறு திட்டங்களையும், அறிவிப்புகளையும் வெளியிட்டு வருகிறார். இதன் காரணமாகவே மாணவர்கள் அதிக அளவில் அரசு பள்ளிகளில் சேர்ந்து படித்து வருகிறார்கள். ஆகையால் நம்மளுடைய திட்டம் மாணவர்களின் எதிர்காலத்தை நோக்கி மட்டுமே இருக்கும் என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *