திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள கலையரங்கத்தில் திருச்சி, கரூர்,அரியலூர் பெரம்பலூர் மற்றும் புதுக்கோட்டை ஆகிய ஐந்து மாவட்டங்களில் உள்ள பேரூராட்சிகள் மற்றும் குடிநீர் வடிகால் வாரியம் ஆகிய துறைகளின் தற்போதைய வளர்ச்சிப் பணிகள் குறித்து ஆய்வு கூட்டம் தமிழக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என் நேரு தலைமையில் நடைபெற்றது. இதில் போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர்,திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர், கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி, திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

கூட்டம் நிறைவு பெற்ற பின்னர் அமைச்சர் கே.என் நேரு செய்தியாளர்கள் சந்திப்பு : குடிநீர் மற்றும் சாலை வசதி போன்ற தேவைகள் குறித்து உடனடி தேவை என்ன என்பது குறித்து கேட்டறிந்தோம் – முதல்வரிடம் விவரங்களை கூறி பரிசீலனை செய்து உரிய நிதியை பெற்றுத் தருவோம். குடிநீர் திட்டம் : திருச்சி தொட்டியம் பகுதியில் 49.35 கோடி செலவில் உருவாக்கப்பட்டு வருகிறது. துறையூர் கோம்பை 75 லட்சம் மதீப்பிட்டில் குடிநீர் திட்டம் பணிகள் நடைபெற்று வருகிறது – இது போன்ற எண்ணற்ற பணிகள் நடைபெற்று வருகிறது – மேலும் பல்வேறு பணிகளுக்கு டெண்டர் கோரப்பட்டுள்ளது.

சொத்து வரி உயர்வு குறித்து : தமிழகத்தில் 2 கோடி குடும்பம் இருக்கிறார்கள் – இதில் 1கோடி 75 லட்சம் குடும்பங்களுக்கு மட்டும் தான் சொத்து வரி உயர்த்தப்பட்டுள்ளது.7 லட்சம் மக்களுக்கு ( குடும்பம் ) மட்டும் தான் 100% வரி உயர்த்தப்பட்டுள்ளது. இந்தியாவில் மிக மிக குறைவாக வரி வசூல் செய்யும் மாநிலம் என்றால் அது கண்டிப்பாக தமிழகம் தான். மற்ற மாநிலத்தில் மிக மிக அதிகம் – தமிழகத்தில் 2ஆயிரம் வரி என்றால் மகாராஷ்டிராவில் 12 ஆயிரம் ரூபாய். என தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *