இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 97வது ஆண்டு அமைப்பு தினத்தை முன்னிட்டு திருச்சி மேற்குப் பகுதிகளுக்கு உட்பட்ட 54 வது வார்டில் செயலாளர் துரைராஜ் தலைமையில் மாவட்டகுழு உறுப்பினர் சத்யா கொடியேறினர். 55வது வார்டில் செயலாளர் முருகன் தலைமையில் மேற்கு தொகுதி பொருளாளர் ரவீந்திரன் குடியேற்றினர். 57 வது வார்டில் செயலாளர் துரைராஜ் தலைமையில் மாவட்ட குழு உறுப்பினர் ஆயிஷா கொடியேற்றினார்,

 

58வது வார்டில் செயலாளர் ரவீந்திரன் தலைமையில் மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் சிவா கொடி ஏற்றினார். 59 வது வார்டில் செயலாளர் ஆனந்த் தலைமையில் மேற்கு பகுதி செயலாளர் முரளி கொடி ஏற்றினார். 60 வது வார்டில் செயலாளர் சரண்சிங் தலைமையில் மாவட்ட குழு உறுப்பினர் இப்ராகிம் கொடியேற்றினர். உறையூர் குறத்தெருவில் கே.டி.கே.தங்கமணி அவர்களின் அலங்கரிக்கப்பட்ட திருவுருவப்படத்திற்கு ஏஐடியுசி ஆட்டோ சங்க செயலாளர் துரைராஜ் தலைமையில் தலைவர் சத்யா முன்னிலையில் திருச்சி மாவட்ட ஏஐடியுசி தலைவர் நடராஜா பங்கேற்று மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

Leave a Reply

Your email address will not be published.