இந்திய யூனியன் முஸ்லிம் லீக் திருச்சி தெற்கு மாவட்ட பீமநகர் பகுதி சார்பில் பவள விழா தேசிய மாநாடு விளக்க தெருமுனை கூட்டம் கூனி பஜார் பகுதியில் மாவட்ட துணைத் தலைவர் அலாவுதீன் தலைமையில் நடைபெற்றது. மேற்கு தொகுதி அமைப்பாளர் அப்துல் கபூர் முன்னிலை வகித்தார். இளைஞர் அணி பொருளாளர் சேக் முகமது கௌஸ், கிராத் ஓதி நிகழ்வை துவக்கி வைத்தார்.
மாவட்டச் செயலாளர் சையது ஹக்கீம், துணைச் செயலாளர் சாதிக்குல் அமீன் ஆகியோர் துவக்க உரையாற்றினார், சிறப்பு அழைப்பாளராக பொன்மலை கோட்டத் தலைவர் துர்காதேவி, மாமன்ற உறுப்பினர் கலைச்செல்வி, திமுக வட்ட செயலாளர் ரஹீம்,ஆகியோர் பங்கேற்றனர். இளைஞர் அணி மாவட்ட செயலாளர் பேராசிரியர் மைதீன் அப்துல்காதர், மாவட்டத் துணைத் தலைவர் முப்தி உமர் பாரூக், ஆகியோர் கருத்துரை வழங்கினார், நிறைவாக மாநில துணைச் செயலாளர் பாரூக் சிறப்புரையாற்றினார்
இந்நிகழ்வில் மாவட்ட நிர்வாகிகள் ஹுமாயூன், அப்துல் கலீல், ஜாஃபர்ஷெரீப், அப்துல் சலாம், ஷாஜகான், பைரோஸ், ஆரிஃபா,ஆயிஷா, பீருனிஷா,நியாஸ் அஹமத் மற்றும் வார்டு நிர்வாகிகள் பீர் முகம்மது, ஆரிப், கலீல், நூர் முகம்மது, ரஷிதா, ஜெயராணி, உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.