தமிழகத்தில் இன்று முதல் இ-பதிவு முறை கட்டாயமாக்கப்படுகிறது. தமிழகத்தில் அதிகரித்துவரும் கொரோனா பாதிப்பினால் வரும் மே 24 ஆம் தேதிவரை முழு ஊரடங்கு நடைமுறையில் உள்ளது. இந்நிலையில் இன்று முதல் (மே 17) முதல் மாவட்டங்களுக்கு உள்ளேயும், வெளியேயும் செல்ல இ-பதிவு முறை கட்டாயமாக்கப்படுகிறது. அத்தியாவசிய பணிகளுக்காக மாவட்டங்களுக்கு உள்ளையேயும், மாவட்டங்களுக்கு வெளியேயும் செல்ல இ-பாஸ் தேவை இல்லை எனவும், ( https://eregister.tnega.org ) என்ற தளத்தில் பதிவு செய்தால் மட்டும் போதுமானது என தமிழக அரசு அறிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்