மறைந்த அருட்தந்தை ஸ்டென்‌ சுவாமி அவர்களின் இரங்கல் கூட்டம் கிறிஸ்துவ நல்லெண்ண இயக்கத்தின் சார்பாக திருச்சி மேலப்புதூர் நல்லாயன் நிலையத்தில் கிறிஸ்துவ நல்லெண்ண இயக்கத்தின் மாநிலத் தலைவரும், திருச்சி கிழக்கு சட்டமன்ற உறுப்பினருமான இனிகோ இருதயராஜ் ‌ தலைமையில் இன்று மாலை 5 மணிக்கு இரங்கல் கூட்டம் நடைபெறுவதாக இருந்த இந்நிலையில் சிறப்பு அழைப்பாளர்களாகபுனித லூர்து அன்னை ஆலயம் Rev.Fr.மரிவளன், TELC பேராலய சபை குரு Rev.Fr. சுந்தரம்‌ ஏசு ராஜ், ஆசிர்வாத‌ மூத்த போதகர் ஐக்கியம் Bishop.சவரிராஜ், பாதிரியார்கள் மற்றும் பங்கு மக்கள் என அனைவரும் இந்த இரங்கல் கூட்டத்திற்கு முன்பே வந்து அவரவர் இருக்கையில் அமர்ந்து கடந்த 2 மணி நேரமாக திருச்சி கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ் அவர்களுக்காக காத்திருந்தனர்.

இந்நிலையில் நீண்ட நேரத்திற்குப் பிறகு வந்த திருச்சி கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ் இரங்கல் கூட்டத்தில் பங்கேற்று அருட்தந்தை ஸ்டென் சுவாமி அவர்களின் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.இக்கூட்டத்தை‌ திருச்சி கிழக்கு மாவட்ட அவைத்தலைவர் ஜேக்கப், மாவட்ட செயலாளர் புஷ்பராஜ் , செய்தி தொடர்பாளர் தன்ராஜ், கிழக்கு தொகுதி செயலர் கனகராஜ் அவர்கள் ஏற்பாடு செய்திருந்தனர்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *