தஞ்சை மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக வந்த திமுக மாநில இளைஞரணி செயலாளரும், எம்.எல்.ஏவுமான உதயநிதி ஸ்டாலினிடம் தஞ்சை மாவட்ட தனியார் கல்லூரி பேராசிரியர்கள் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.

அந்த மனுவில் கூறியிருப்பதாவது.

 

கவுரவ விரிவுரையாளர்களை பணி நிரந்தரம் செய்தால் பல ஆயிரக்கணக்கான தனியார் கல்லூறி பேராசிரியர்கள் மற்றும் Ph.D முனைவர் பட்டம் பெற்றவார்கள் அரசு கல்லூரி பணி வாய்ப்பை இழப்பார்கள். அதனால் ஒருங்கிணைந்த பொது TRB முறையில் கவுரவ விரிவுரையாளர்கள மற்றும் தனியார் கல்லூரி விரிவுரையாளர்களை ஒரே சமயத்தில் நேர்காணல் செய்து தகுதியான உதவி பேராசிரியர் நியமனம் நடை பெறவேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். இந்த நிகழ்வில் அனைத்து தனியார் கல்லூரி கூட்டமைப்புின் மாநில தலைவர் முனைவர் சரவணன் மாநில துணைத் தலைவர் முனைவர் விஜயாபானு மாநில செயலாளர் முனைவர் செந்தில்குமார் பேராசிரியர் முனைவர் தமிழரசன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *