மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களை வாபஸ் பெற கோரி விவசாயிகள் போராட்டம் உத்திர பிரதேசம் மாநிலம் லக்கிம்பூர் மாவட்டம் திகுன்னியா அருகில் பன்வீர்பூர்-ரில் நடைபெற்றபோது

மத்திய உள்துறை இணை மந்திரி அஜய் மிஸ்ரா தூண்டுதலில் பேரில் அவர் மகன் கூட்டத்தில் விவசாயிகளின் மீது காரை ஏற்றியத்தில் 8 விவசாயிகள் உயிர் இழந்ததை கண்டித்தும், மத்திய உள்துறை இணை மந்திரி அஜய் மிஸ்ரா பதவி விலக வேண்டும்,

அவரையும், அவரின் மகன் மீது காவல்துறை FIR பதிவு செய்து உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் மனித மண்டை ஓட்டுகள் உடன் விவசாயிகள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்‌.

இந்த உண்ணாவிரத போராட்டத்திற்கு மாநில துணை தலைவர்கள் கரூர் தட்சிணாமூர்த்தி, பரமசிவம், மாநில செயலாளர் நகர் ஜான் மெல்கியோராஜ், மாநில செய்தி தொடர்பாளர் பிரேம்குமார் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு கண்டன கோஷங்கள் எழுப்பினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *