தமிழ்நாடு அனைத்து கல்லூரி பேராசிரியர்கள் கூட்டமைப்பின் மாநில நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் திருச்சியில் இன்று நடைபெற்றது இந்த கூட்டத்திற்கு மாநில ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் தமிழரசன் தலைமை தாங்கினார் இந்தக் கூட்டத்தில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது அதனைத் தொடர்ந்து மாநில ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் தமிழரசன் பத்திரிக்கையாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

தமிழகத்தில் 2331 உதவி பேராசிரியர் பணியிடங்களை நிரப்ப 2019-ம் ஆண்டு ஆசிரியர் தேர்வு வாரியம் விளம்பரம் வெளியிட்டது. அதன் அடிப்படையில் இந்த பணியிடங்களுக்கு சுமார் 30 ஆயிரம் பேர் வரை விண்ணப்பம் செய்திருந்தனர். அந்த விண்ணப்பங்களை பரிசீலனை செய்து வந்த நிலையில், ஆசிரியர் தேர்வு வாரியம் அதை ரத்து செய்துவிட்டது. அதற்கு பதிலாக கடந்த மார்ச் மாதம் 4000 உதவி பேராசிரியர்கள் பணியிடங்களை நிரப்ப ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதை எதிர்த்து அனைத்து தனியார் கல்லூரி ஆசிரியர்கள் சார்பாக சென்னை ஐகோர்ட்டு மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரணை செய்த ஐகோர்ட்டு, 2019-ம் ஆண்டு ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்ட அறிவிப்பை ரத்து செய்தது ஏற்புடையது அல்ல என்றும், மீண்டும் அந்த அறிவிப்பின்படி பணி நியமனம் செய்யும் பணிகளை தொடர வேண்டும்

அது குறித்து அரசு உடனடியாக அறிவிக்க வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது. ஆனால் கடந்த மார்ச் மாதம் ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்ட விளம்பரத்தில் அரசு கல்லூரி கௌரவ விரிஉரையாளர்களுக்கு வெயிட்டேஜ் மதிப்பெண் 15என்றும் தனியார் கல்லூரி மற்றும் பல்கலைக் கழகங்களில் பணிபுரிவர்களுக்கு வெயிட்டேஜ் மதிப்பெண் கிடையாது என்றும் அறிவித்திருப்பது பாகுபாடு உடையது மற்றும் சட்டத்திற்கு புறம்பானது எனவே அந்த அறிவிப்பாணையை நீதிமன்றம் ரத்து செய்தது. இந்த நீதிமன்ற தீர்ப்பை உயர்கல்வித்துறை இதுவரை செயல்படுத்தவில்லை. இது நீதிமன்றத்தை அவமதிக்கும் செயலாகும். நீதிமன்றத்தையே அவமதிக்கும் விதமாக நடந்து கொள்ளும் உயர்கல்வித்துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகள் மீது தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும். இது தொடர்பாக சென்னையில் முதல்-அமைச்சரை சந்தித்து விரைவில் மனு கொடுக்க உள்ளோம் என தெரிவித்தார். இந்த பேட்டியின் போது கூட்டமைப்பின் தஞ்சை மண்டல ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் பாலசுப்ரமணியன் கார்த்திகேயன், அந்துவான் பாபு, உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *