திருச்சி உறையூர் கடைவீதி பேருந்து நிறுத்த சாலையில் உள்ள 3 டாஸ்மாக் கடைகளை இழுத்து மூட வலியுறுத்தி இன்று காலை போராட்டம் நடத்த போவதாக மக்கள் அதிகாரம் தலைமையில் பொதுநல அமைப்புகள் வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் திருச்சி மாவட்ட கலெக்டரிடம் கோரிக்கை மனு அளித்தனர். அதன் அடிப்படையில் திருச்சி மாவட்ட கலெக்டர் பிரதீப் குமார் இன்று காலை 3- டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு பிறப்பித்துள்ளார். டாஸ்மாக் கடைகளை மூடிய தமிழக அரசுக்கும் மாவட்ட ஆட்சியருக்கும் நன்றி தெரிவித்து மக்கள் அதிகாரம் தலைமையில் பொதுநல அமைப்புகள் வியாபாரிகள் பங்கேற்று பொதுமக்களுக்கு இனிப்பு கொடுத்து வெடி வெடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். மேலும் பூரண மதுவிலக்கை மக்களின் பாதிப்புகளை உணர்ந்து தமிழக அரசு அமல்படுத்த வேண்டும் என முழக்கமிட்டனர். மக்கள் அதிகாரத்தின் மாவட்டச் செயலாளர் செழியன் தலைமையில் டாஸ்மாக் போராட்டத்தை பற்றி பேசினார். அடுத்ததாக மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் மாநில பொதுச் செயலாளர் கோவன் மேற்கண்ட கோரிக்கை வலியுறுத்தி பேசினார்.

 கூடுதலாக சாராயம் குடிக்க கூடிய அனைவரும் போதையில் இருந்து விடுபடவும் தமிழக அரசு வருமானத்தை பார்க்காமல் மக்களின் வாழ்வாதாரத்தை பார்க்க வேண்டுமென பாடலாக பாடி வெளிப்படுத்தினார். தமிழக விவசாய சங்கத்தின் மாவட்ட தலைவர் சின்னத்துரை பூரண மதுவிலக்கை தமிழக அரசு அமல்படுத்த வேண்டும். புதிதாக எங்கு டாஸ்மாக் வந்தாலும் பொதுநல அமைப்புகள் ஒன்றாக இணைந்து ஒற்றுமையுடன் போராட வேண்டும் என அரைகூவல் விடு்த்தார். அடுத்ததாக சிபிஐ கட்சியின் மாவட்ட செயலாளர் சிவா தற்காலிகமாக மூடிய கடையை வேறு எங்கு தொடரவும் கூடாது அப்படி தொடர்ந்தால் நாங்கள் தொடர்ந்து போராடுவோம் பூரண மதுவிலக்கு அமல்படுத்தும் வரை தொடர்ந்து போராடுவோம் என பேசினார் அப்பகுதி உள்ள கடைக்காரர்கள் அனைவரும் இணைந்து ஜனநாயக முற்போக்கு அமைப்புகளுடன் கட்சி கூட இணைந்து இனிப்புகளை பகிர்ந்து கொண்டு பங்கேற்றனர்.

காவல்துறையினரும் கடை எடுத்ததற்கு போராடியதற்கு நன்றி தெரிவித்தனர். அப்பகுதி மக்கள் சில கட்சியினர் இனிப்பு வழங்குவதும் கேக் வெட்டி உற்சாகத்தை வெளிப்படுத்தினர். தொடர்ந்து இது போன்ற மக்கள் பாதிப்பான பிரச்சனைகளுக்கு பொது நல அமைப்புகள் ஜனநாயக சக்திகள் தொடர்ந்து குரல் கொடுக்கும் என்பதை இந்த நிகழ்ச்சியின் மூலம் பொதுநல அமைப்புகள் வெளிப்படுத்தினர். விடுதலை சிறுத்தை கட்சியின் பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதி செயலாளர் தமிழாதன் மற்றும் தில்லைநகர் பகுதி செயலாளர் தில்லை முரசு மற்றும் விடுதலை சிறுத்தை தோழர்கள் கலந்து கொண்டனர்.

 சமூக நீதிப் பேரவை தலைவர் ரவிக்குமார் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர் ஜனநாயக சமூக நல கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் சம்சுதீன் மற்றும் தோழர்களுடன் கலந்து கொண்டனர் மக்கள் உரிமை கூட்டணி மாவட்ட செயலாளர் காசிம் மற்றும் தோழர்களுடன் கலந்து கொண்டனர் மக்கள் உரிமை மீட்பு இயக்கம் நிறுவனர் பஷீர் மற்றும் அவரது மனைவி மற்றும் தோழர்களுடன் கலந்து கொண்டனர் அமைப்புசாரா தொழிலாளர் இயக்கத்தின் சார்பில் சைனி கலந்து கொண்டார் மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் கலை குழு பொறுப்பாளர் லதா கலந்து கொண்டார். தமிழ் தேச மக்கள் முன்னணியின் வழக்கறிஞர் கென்னடி, தமிழ் புலிகள் கட்சியின் மண்டல செயலாளர் ரமணா மற்றும் தோழர்களுடன் கலந்து கொண்டார் ஆட்டோ ஓட்டுனர் பாதுகாப்பு சங்கத்தின் மாவட்ட செயலாளர் மணலி தாஸ், மக்கள் உரிமை பாதுகாப்பு மையத்தின் வழக்கறிஞர் ஆதிநாராயணன் மூர்த்தி, மக்கள் அதிகாரத்தின் மாநகர செயலாளர் ஆனந்த் மற்றும் நிர்வாகிகள் மக்கள் கலை இலக்கிய கழகத்தின் மாவட்ட செயலாளர் ஜீவா மற்றும் சரவணன் தோழர்களுடன் கலந்து கொண்டனர். அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தின் இப்ராகிம் அவரது தோழர்களுடன் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *