கொரோனா நோய்த்தொற்று பரவும் இந்த கொடிய காலத்திலும் தன் பிள்ளைகளுக்கு நோய் தொற்று வராமல் அன்போடும் அரவணைப்போடும் பாதுகாத்துவரும் அன்னையர்களுக்கு அன்னையர் தின நல்வாழ்த்துக்கள்.
இன்று உலக அன்னையர் தினம் (Mother’s day) அன்னையர் மற்றும் தாய்மையைப் போற்றும் நாள். அன்னையர் தினம் ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் இரண்டாவது ஞாற்றுக்கிழமையை உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. அம்மா.. கடவுள் நமக்கு கொடுத்த பரிசு. “தாயை வணங்கு. இறைவனை வணங்குவதை விட தாயை வணங்குவதே பெரும் புண்ணியம்” என்று கவிஞர் கண்ணதாசன் கூறியுள்ளார். ‘இந்த உலகில் நான் நேசிப்பது என்ற ஒன்று இருந்தால் அது என் தாய் தான்’ என்று குறிப்பிட்டுள்ளார் விவேகானந்தர். தாய் எதையும் எதிர்பார்க்க மாட்டாள். அவள் அன்பு இணையில்லாதது. விலைபேச முடியாதது. அன்னையர் தினம். தாய்மையை போற்றும் தினம். ஒவ்வொரு நாளும் அன்னையர் தினமாக உலகில் வாழும் ஒவ்வொருவரும் கொண்டாடி வருகின்றனர்.