திருச்சி செயின்ட் ஜான் வெஸ்ட்ரி ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் , உலக காசநோய் தினத்தினை முன்னிட்டு காசநோய் விழிப்புணர்வுக் கையேட்டினை மாவட்ட ஆட்சித்தலைவர் சிவராசு வெளியிட்டார் ,

அதனைத் தொடர்ந்து கல்லூரி மாணவ , மாணவிகள் பங்கேற்ற விழிப்புணர்வுப் பேரணியை தொடங்கி வைத்தார் . இப்பேரணியில் தந்தை பெரியார் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி , ஜமால் முகமது கல்லூரி , தேசிய கல்லூரி , தந்தை பெரியார் மருந்தியல் கல்லூரிகளைச் சேர்ந்த் 400 மாணவ , மாணவிகள் பதாகைகள் , விழிப்புணர்வுக் கொடி பிடித்துக்கொண்டு வெஸ்ட்ரி பள்ளியில் ஆரம்பித்து ஜங்ஸன் ரவுண்டான வரை சென்றனர் . பெரியார் மருந்தியல் கல்லூரியில் காசநோய் விழிப்புணர்வு நிகழ்வு நடைபெற்றது . காச நோயாளிகளுக்கு ஊட்டச்சத்து மற்றும் இவ்விழாவில் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது . இந்நிகழ்ச்சியில் இணை இயக்குநர் ஊரக நலப்பணிகள் டாக்டர் லெட்சுமி , துணை இயக்குனர் ( காசநோய் ) டாக்டர்.சாவித்திரி உள்பட பலர் கலந்து கொண்டனர் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்