பொது அறுவை சிகிச்சைகள், லேப்ராஸ்கோபி அறுவை சிகிச்சைகள், குடல் இறக்கம் (ஹெர்னியா) சிகிச்சைகளுக்கான முகாம் இன்று ஏப்ரல் 7ம் தேதி தொடங்கி 9ம் தேதி வரை மூன்று நாட்களுக்கு நடக்கிறது. முகாமில் பொது அறுவை சிகிச்சைகளான வயிற்று வலிகள், குடல் அடைப்பு, குடல் ஓட்டை, குடல் கட்டிகள், மலச்சிக்கல், கழுத்து கட்டிகள், தைராய்டு கட்டிகள், மார்பக கட்டிகள், பரோட்டி கட்டிகள், கணையம் கல்லீரல் சம்பந்தமான தொந்தரவுகள், மூல நோய்கள், விரை வீக்கம், பாத புண்கள், ரத்தக்குழாய் வியாதிகள் போன்ற நோய்களுக்கு இலவச ஆலோசனைகள் வழங்கப்பட்டது.
மேலும் வயிற்றின் அடிப்பகுதியில் வரும் இங்குனியல் ஹெர்னியா, தழும்பு சார்ந்து வருவது, தொப்புளில் வருவது, ஹையாடஸ் ஹெர்னியா, பிமோரல் ஹெர்னியா, அப்பன்டிக்ஸ், பித்தப்பை நோய்கள், வயிற்றுக் கட்டிகள், கர்ப்பப்பை கட்டிகள், சினைப்பை கட்டிகள் ஆகிய நோய்களுக்கு மருத்துவமனையின் நிர்வாக இயக்குனர் மற்றும் பொது அறுவை சிகிச்சை மற்றும் லேப்ராஸ்கோப்பி அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் ராதாகிருஷ்ணன் மருத்துவம் மற்றும் ஆலோசனைகள் வழங்கினார்.
இம்முகாமில் 300க்கும் மேற்கொண்டோர் கலந்து கொண்டு பயன் பெற்றனர். இதில் அறுவை சிகிச்சைக்காக 28 பேர் பரிந்துரை செய்யப்பட்டனர். முகாம் ஏற்பாடுகளை மக்கள் தொடர்பு அதிகாரிகள் ஸ்டீபன், ஜெயபிரகாஷ், தியாகு மற்றும் மருத்துவமனை ஊழியர்கள் செய்திருந்தனர்