உலக மருந்து ஆளுநர்கள் தினத்தை முன்னிட்டு பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் இன்று நடைபெற்று வருகிறது. அந்த வகையில் உலக மருந்தாளுநர்கள் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியில் இருந்து திருச்சி தெப்பக்குளம் வரை இந்த பேரணி நடைபெற்றது. இந்திரா கணேசன் மருந்தியல் கல்லூரி மற்றும் திருச்சி மாவட்ட ரெட் கிராஸ் சார்பில் நடைபெற்ற இந்த விழிப்புணர்வு பேரணியை ரெட் கிராஸ் திருச்சி மாவட்ட தலைவர் ராஜசேகரன் துவக்கி வைத்தார்.
இந்த பேரணியில் நூற்றுக்கும் மேற்பட்ட மருந்தியல் கல்லூரி மாணவர்கள் மற்றும் மாணவிகள் கலந்து கொண்டனர்.திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியில் துவங்கிய இந்த பேரணி ஆனது ஹோலி கிராஸ் கல்லூரி, சத்திரம் பேருந்து நிலையம் வழியாக திருச்சி தெப்பக்குளத்தை காலை 10:30க்கு வந்தடைந்தது.