உலக மாற்றுத்திறனாளிகள் தினவிழாவை முன்னிட்டு திருச்சி கலையரங்கத்தில் நடைபெற்ற விழாவில் 292 மாற்றுத் திறனாளிகளுக்கு ரூபாய் 67 இலட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும், சிறப்பாக சேவையாற்றிய தொண்டு நிறுவனங்களுக்கு கேடயம் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களையும், மாற்றுத்திறனாளிகளுக்கு அதிகளவில் வேலை வாய்ப்பு அளித்த நிறுவனங்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களையும், பல்வேறு விளையாட்டுப்போட்டிகளில் வெற்றி பெற்ற மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகளுக்கு பாராட்டுச் சான்றிதழ்களை தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வழங்கி விழாப்பேருரையாற்றினார். இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப்குமார், மாவட்ட மாற்றுத் திறனாளி நல அலுவலர் சந்திரமோகன் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

நிகழ்வில் பேசிய தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில்மகேஷ் பொய்யாமொழி:- இந்த நாளை மகிழ்ச்சி மிக்க நாளாக பார்க்கிறேன் நேற்று என்னுடைய பிறந்தநாளை கொண்டாடிவிட்டு இன்றைக்கு ஆன்மீகத்தில் நம்பிக்கை உள்ளவர்கள் சொல்வது போன்று என்னுடைய நட்சத்திர பிறந்த நாள் மாவட்ட ஆட்சியர் பிறந்த நாளை சேர்த்து உங்களோடு சேர்ந்து கொண்டாடுவது மகிழ்ச்சியும், பெருமையாக உள்ளது. தமிழகத்தில் எந்த பள்ளிக்கூடத்துக்கு சென்றாலும் மாணவர்களை சந்திக்கும் போது கட்டமைப்பு வசதிகளை பார்க்கும் போதெல்லாம் அவர்களுக்கு எப்படி இது பயன்படுவதாக இருக்கும் எந்த அளவுக்கு அவர்களுக்கு சுலபமாக கடந்து செல்ல முடியும் என்று பார்ப்பேன். குறிப்பாக பள்ளி ஆண்டு விழாவில் நான் பேசும்போது எல்லாம் என்னுடைய கண்களில் மாற்றுத் திறனாளி மாணவர்களை பார்க்கும்போது என்னை பொறுத்த வரைக்கும் மாற்றுத்திறனாளிகளின் பெற்றோரை கடவுளாக பார்க்கிறோம் என்று மறக்காமல் சொல்வது வழக்கம். சொல்வதற்கு காரணம் அந்த பிள்ளைகளை தங்கள் வீட்டோடு வைத்து விடாமல் என்னுடைய பிள்ளைக்கும் திறமை உண்டு என்னுடைய பிள்ளையும் அறிவில் சிறந்த மாணவனாக வருவான் என்று எங்களை நம்பி அனுப்பி வைக்கின்றனர், அதற்காகவும் சொல்கின்றேன்.மாவட்ட ஆட்சித் தலைவர் பேசும்போது ஸ்டீபன் ஹாக்கிங்சை பற்றி கூறினார் அவர் மாற்று திறனாளியாக மிகப்பெரிய அறிவு ஜீவி, ஹெலன் கில்லர் என்ற எழுத்தாளர் அவர் ஒரு மாற்றுத்திறனாளி தான் ஜான்ஹேக் என்ற கணிதத்தில் நோபல் பரிசு பெற்றவரும் மாற்றுத்திறனாளி தான், இசைக்கெல்லாம் மிகப் பெரிய இறைவனாக கருதக்கூடிய பீத்தோவான் மாற்றுத்திறனாளி தான் அந்த வகையில் உங்களாலும் முடியும் என்று நம்பக்கூடிய வகையில் மேடையில் அமர்ந்திருக்கிறவர்கள். ஒவ்வொருவருமே அந்த வகையில் உங்களுக்கு ஒவ்வொருவருக்கும் நல்ல திட்டம் வழங்க வேண்டும் என்று தான் ஒன்று கூடி உள்ளோம்.

குறிப்பாக இன்று தமிழக முதல்வர் நடத்தக்கூடிய திராவிட மாடல் ஆட்சி என்பது அனைவருக்கும் எல்லோருக்கும் என்பது போன்ற கல்வியை வழங்க வேண்டும் என்ற விதத்தில் பயணித்துக் கொண்டிருக்கிறார். கலைஞர் நூற்றாண்டில் இந்த தினம் வந்திருப்பது கூடுதல் பெருமையாக பார்க்கின்றேன் உங்களுக்காக தமிழக முதல்வர் பல்வேறு திட்டங்களை தீட்டி வருகிறார் அந்த வகையில் நமது விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சர் உங்களுக்கான பாதையை கடற்கரை ஓரமாக அமைத்தார் என்று சொல்லும் போது கடற்கரை எங்களுக்கு மட்டும் சொந்தம் அல்ல அது கிட்ட சென்று பார்த்து ரசிக்க வேண்டும் என்பது மாற்றுத்திறனாளிக்கும் சொந்தம் என்று அதனை அமைத்துக் கொடுத்தவர் அமைச்சர் உதயநிதிஸ்டாலின் என்று சொல்லும் போது அவருக்கு உங்கள் சார்பாக நன்றி தெரிவித்து கொள்கிறேன். சட்டமன்றத்தில் அவர் முதல் பேசிய கன்னிய பேச்சு அவர் யாரைப் பற்றி அதிகமாக பேசினார் என்றால் மாற்றுத்திறனாளிகளை பற்றியே இருந்தது என்று சொல்லும் போது எந்த அளவுக்கு தனது தாத்தா, தந்தை என்று வழிவழியாக அந்த அக்கறையும் அன்பையும் செலுத்துகின்ற ஒரு குணம் படைத்திருக்கிறார் என்பதை நீங்கள் உணர வேண்டும். இதோ என் நண்பர் என்பதற்காக நான் சொல்லவில்லை மாற்றுக் கட்சிகள் இருக்கக் கூடியவர்கள் கூட அவருடைய இந்த செயலை பார்த்து பாராட்டுகிறார்கள் என்று சொல்லும் பொழுது அப்படிப்பட்ட இந்த திராவிட மாடல் ஆட்சியை தமிழகத்தின் முதலமைச்சர் வழங்கிக் கொண்டிருக்கிறார் அந்த வகையில் இந்த மாற்றுத்திறனாளிகள் உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தை கொண்டாடுகின்ற இவர்களுக்கு நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து வாழ்க்கையில் ஒளியேற்ற வைப்பதற்கு தொடர்ந்து பாடுபடுவோம் என தெரிவித்தார்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *