தமிழகம் முழுவதும் விரைவில் நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விரும்புபவர்களிடம் இருந்து அனைத்துக் கட்சியினரும் விருப்ப மனுக்களை பெற்று வருகின்றனர். அதே போல் பாரதிய ஜனதா கட்சியின் சார்பிலும் தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் மாவட்ட தலைவர்கள் விருப்ப மனுக்களை பெற்று வருகின்றனர்.

 

இந்நிலையில் 2021 நடைபெற இருக்கின்ற உள்ளாட்சி தேர்தலில் திருச்சி மாநகர் மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் விருப்ப மனுக்களை மாநில துணை தலைவர்கள் ராஜா , சிறப்பு அழைப்பாளர் சம்பத், மற்றும் மாவட்ட தலைவர் ராஜசேகரன் ஆகியோர் பெற்று வருகின்றனர்.

இதனையடுத்து இன்று நடைபெற்ற முகாமில் மலைக்கோட்டை மண்டல் ஒபிசி அணி தலைவர் கதிர் வேல் முருகன் 19 வார்டில் பா.ஜ.க சார்பாக போட்டியிட விருப்ப மனுவை திருச்சி மாநகர் மாவட்ட தலைவர் ராஜசேகரனிடம் வழங்கினார். அருகில் கட்சி நிர்வாகிகள் உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்