திருச்சி திருவெறும்பூர் திருநங்கைகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக தனியார் தொண்டு நிறுவனம் மூலம் மாவு அரைக்கும் மில் திறக்கப்பட்டது. திருநங்கைகள் சமுதாயத்தில் கடை கடையாக சென்று காசு வாங்குவதையும் பாலியல் தொழிலில் ஈடுபடுவதையும் அவர்களுக்கு மாற்று தொழில் ஏற்பாடு செய்து கொடுக்கும் வகையில் தடுக்க கோரோட் அறக்கட்டளை மூலமாக திருச்சி திருவெறும்பூர் வேங்கூரில் சூரிய சக்தியில் இயங்கக்கூடிய மாவரைக்கும் மில் திறக்கப்பட்டது. இதனை தென்னிந்திய திருநங்கைகள் சங்க தலைவி மோகனாம்பாள் திறந்து வைத்தார்.

இதில் அறக்கட்டளை நிர்வாகிகள், திருநங்கைகள் உட்பட பலர் கலந்து கொண்டனர் இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த திருநங்கை மோகனாம்பாள் கூறுகையில், திருநங்கைகள் வாழ்வாதார மேம்பாட்டுக்காக இந்த மாவு மில் அரைக்கும் கூடிய மாவுகள் திருநங்கைகள் மூலம் கடை கடையாக சென்று விற்பனை செய்யப்படும். மேலும் இங்கு மாவு அரைத்து கொடுக்கப்படும். இங்கு திருநங்கைகள் வாழ்வாதார மேம்பாட்டுக்காக உளவியல் மற்றும் தொழில் முனைவோருக்கான பயிற்சி அளிக்கப்பட்டு

இதுபோன்று மாவரைக்கும் மில், தையலகம், போன்றவை நிறுவப்பட்டு வாய்ப்பு அளிக்கப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக தனியார் தொண்டு நிறுவன உதவியுடன் இந்த மாவு அரைக்கும் மில் இன்று தொடங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் திருநங்கைகள் கடைகளுக்கு சென்று மாவு பாக்கெட் விற்பனை செய்தும், வாடிக்கையாளர்களுக்கு மாவரைத்து கொடுத்தும் திருநங்கைகளுக்கு வாழ்வாதாரத்தை பெருக்கி கொள்ள எதுவாக அமைந்துள்ளது. நாங்கள் உழைக்க தயாராக இருக்கிறோம் எங்களை இந்த சமுதாய மக்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்பது எங்களுடைய வேண்டுகோள் என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்