கடந்த 10 ஆண்டுகளாக பணியில் இழந்து மீண்டும் பணி நியமனத்திற்காக காத்திருக்கும் மக்கள் நலப் பணியாளர்களுக்கு பணி நிரந்தரம் ஊதிய உயர்வுடன் பணிநியமனம் வழங்கக் கோரி தமிழ்நாடு மக்கள் நல பணியாளர்கள் சங்கத்தின் தலைவர் நடராஜன் தலைமையில் திருச்சி மாவட்ட கலெக்டரிடம் மனு அளிக்க இன்று வந்தனர்.

மனுவில் அளிக்கப்பட்ட கோரிக்கைகளாக:-

 

கடந்தகால பணிநியமன அரசாணை ரத்து செய்து பணி நிரந்தரம் செய்து பணி நியமனம் அரசாணை வெளியிட கோரியும், 2009 ஆம் ஆண்டில் நிதித்துறை அரசாணையில் 234 இன்படி சிறப்பு காலமுறை ஊதியம் பெற்று வந்தோம் எங்களுக்கு இணையாகவே இதை அரசாணையின்படி ஊராட்சி உதவியாளர்கள் சிறப்பு காலமுறை ஊதியம் வழங்கப்பட்டது. ஆகவே முப்பத்தி ஒரு வருடமாக வாழ்வையே பறிகொடுத்து நிற்கும் எங்களுக்கும் இன்றைய பொருளாதார நிலைக்கேற்ப எங்களில் இருந்து பதவி உயர்வு பெற்று சென்ற அலுவலக உதவியாளர்களுக்கு இணையான காலமுறை ஊதியம் வழங்கி எங்கள் குடும்பங்களை வாழவைக்கக் கோரியும், ஐம்பது வயதிற்கு மேற்பட்ட பணியில் இருந்து விரைவில் ஓய்வு பெற இருக்கும் மக்கள் நல பணியாளர்களுக்கு அவர்களது விருப்பத்தின் அடிப்படையில் அவர்களது வாரிசுகளுக்கு பணி நியமனம் வழங்க கோரியும், 1990ம் ஆண்டு பணி நியமனம் செய்யப்பட்டு அதிமுகவின் பழிவாங்கும் போக்கால் வாழ்விழந்து நிற்கும் எங்களுக்கு பணி நியமனம் செய்யப்பட்ட நாள் முதல் பணிக்காலமாக அறிவித்து அதற்குரிய பலன் கிடைக்க கோரியும்,

2006 2011 ஆம் ஆண்டுகளில் தலைவர் கலைஞர் ஆட்சியில் வண்ணத் தொலைக்காட்சி வழங்கும் திட்டம் கலைஞர் வீடு வழங்கும் திட்டம் போன்ற திட்டங்கள் எங்கள் மூலமாகவே செயல்படுத்தப்பட்டது அதேபோன்று தற்போதும் எண்ணற்ற திட்டங்களை கிராமங்களுக்கு அறிவித்துள்ளார்கள் திட்டங்கள் எங்கள் மூலமாக செயல்படுத்த கோரியும், தலைவர் கலைஞர் அவர்களால் 1990 இல் உருவாக்கப்பட்ட அதிமுகவால் பழிவாங்கப்பட்ட 13,500 மக்கள் நலப் பணியாளர்களுக்கு தற்போதைய தங்களின் ஆட்சியில் விரைவில் நிரந்தரம் செய்யப்பட்ட பணி நியமனம் வழங்கி ஊதிய உயர்வுடன் கூடிய பணி வழங்கி எங்கள் குடும்பங்களை வாழ வைக்கக் கோரி கேட்டு மனு அளிக்க வந்தனர். இதில் தமிழ்நாடு மக்கள் நல பணியாளர்கள் சங்கத்தின் அமைப்பாளர் ராஜ்குமார் பொருளாளர் பாலசுப்பிரமணியன் உள்ளிட்ட சங்க நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *