வருகிற 10-ம் தேதி முதல் 24 ஆம் தேதி வரை தமிழக அரசு முழு ஊரடங்கு உத்தரவை அறிவித்துள்ளது. இந்நிலையில் இன்று சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை ஆகிய இரு தினங்களில் பொதுமக்கள் தங்களுக்குத் தேவையான பொருட்களை வாங்கிக் கொள்வதற்காக அறிவிக்கப்பட்டிருந்த ஊரடங்கு உத்தரவில் தளர்வு ஏற்படுத்தியது. இந்நிலையில் தமிழக அரசு வழங்கிய தளர்வினை திருச்சி மக்கள் சமூக இடைவெளியின்றி கூடியும் வாகனங்களில் சென்று போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்தி திருச்சியை ஸ்தம்பிக்க வைத்தனர்.