திருச்சி கலையரங்கத்தில், மாவட்ட நிர்வாகம், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு (ம) தொழில்நெறி வழிகாட்டல் மையம் இணைந்து நடத்தும் மாற்றுத் திறனாளிகளுக்கான தனியார் வேலை வாய்ப்பு முகாமில் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பணி நியமன ஆணைகளை இன்று , மாண்புமிகு நகராட்சி நிருவாகத் துறை அமைச்சர் கே.என் நேரு மற்றும் தமிழ்நாடு சிறுபான்மையினர் துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் ஆகியோர் கலந்து கொண்டு பணி நியமன ஆணை மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்கள்..

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் கே என் நேரு :-

திருச்சி மாவட்டத்தில் இருக்கக்கூடிய மாற்றுத்திறனாளிக்கான பிரத்தேகமாக வேலை வாய்ப்பு முகாம் நடத்தப்பட்டது. இந்த முகாமில் 27 நிறுவனங்கள் கலந்து கொண்டது. இதில் 19 நிறுவனங்கள் திருச்சியை சேர்ந்தவை ஆகும்.மேலும் இந்த முகாமில் பதிவு செய்தவர்கள் 154 பேர் மாற்றுத்திறனாளிகள். இதில் முதல்கட்டமாக 15 நபர்களுக்கு வேலை வாய்ப்புக்கான சான்றிதழ்களையும் அவர்களுக்கு தேவையான உபகரணங்களையும் வழங்கப்பட்டுள்ளது. தொடர்ந்து மாற்றுத்திறனாளிக்கான தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மாவட்ட நிர்வாகம் சார்பாக எடுக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் தற்போது புதிய வகையான காய்ச்சல் பரவி வருகிறது ,அதற்கு தடுப்பு நடவடிக்கை என்ன எடுத்து உள்ளீர்கள் என்ற கேள்விக்கு??

தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அவர்கள் இது குறித்து தெளிவாக தெரிவித்துள்ளார். தொற்று பரவாமல் தடுப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பாக எடுக்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து எடப்பாடி பழனிச்சாமி தமிழ்நாடு முதலமைச்சரை அவதூறாக பேசி வருகிறார் , இது குறித்து உங்களுடைய கருத்து ??? ஏற்கனவே அதிமுக ஆட்சிக் காலத்தில் தளபதி ஸ்டாலின் மீது 100க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. அதேபோன்று எங்களை போன்ற முக்கிய நிர்வாகிகள் மீதும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டது .ஆனால் நாங்கள் யாரும் ஆர்ப்பாட்டமும், போராட்டமோ நடத்தவில்லை நீதிமன்றத்தை மட்டும் தான் அணுகினோம்.. *எடப்பாடி பழனிச்சாமியின் தரம் அவ்வளவுதான் அவர் அப்படித்தான் பேசுவார்*. என கூறினார். இந்நிகழ்வில் திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் ,மாநகராட்சி மேயர் அன்பழகன்,துறை அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *