திருச்சியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் காதர் மொய்தீன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார் அப்போது அவர் கூறுகையில்..,இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இணை அமைப்புகளான அனைத்திந்திய கேரளா முஸ்லிம் சென்டர் சார்பில் நாளை 25 திருமண ஜோடிகளுக்கு இலவச திருமணம் நடைபெற உள்ளது இந்த நிகழ்வில் அமைச்சர்கள் கே என் நேரு அன்பில் மகேஷ் பொய்யாமொழி உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர். அனைத்திந்திய கேரளா முஸ்லிம் சென்டர் சார்பில் பல்வேறு சமூக சேவைகள் செய்யப்பட்டு வருகிறது என கூறினார்.
*தமிழக ஆளுநரின் செயல்பாடுகள் குறித்த கேள்விக்கு..* இதுவரை தமிழகத்திற்கு வந்த ஆளுநர்களிலேயே அனைவரும் தமிழகத்திற்கு ஆதரவாகவும் ஆறுதல் சொல்லக்கூடிய வகையிலும் தான் இருந்தது. தமிழக ஆளுநர் ஆர் என் ரவி எதிர்க்கட்சியை போல செயல்படுகிறார். எதிர்க்கட்சியாக இருக்கக்கூடிய அதிமுகவை காட்டிலும், மோசமான எதிர்க்கட்சியாக ஆளுநர் RN ரவி செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு நாடாளுமன்ற தேர்தலில் ஒரு தொகுதியை கொடுத்துள்ளனர் இரண்டு தொகுதி கொடுத்தால் நன்றாக இருக்கும் என கேட்டுள்ளோம்.