தமிழக முன்னாள் முதலமைச்சரும், அதிமுக நிறுவனருமான எம்.ஜிஆரின் 107 வது பிறந்த நாளை முன்னிட்டு கோர்ட்டு அருகில் உள்ள அவரது உருவ சிலைக்கு திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக செயலாளர் சீனிவாசன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

இதேபோல் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக திருச்சி மாநகர் மாவட்ட மகளிர் அணி இணைச் செயலாளர் ஜெயஸ்ரீ தலைமையில் மகளிர் அணியினர் எம்ஜிஆரின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

நிகழ்ச்சியில் மாவட்ட எம் ஜி ஆர் இளைஞர் அணி செயலாளர் முத்துக்குமார், மாவட்ட மாணவரணி செயலாளர் என்ஜினியர் இப்ராம்ஷா, எம்ஜிஆர் மன்ற செயலாளர் கலிலுல் ரஹ்மான், மகளிர் அணி செயலாளர் நசீமா பாரிக், இலக்கிய அணி செயலாளர் பாலாஜி,கலைப்பிரிவு மாவட்ட செயலாளர் ஜான் எட்வர்ட் குமார், மாவட்ட துணைச் செயலாளர்கள் பத்மநாதன், வனிதா, பகுதி செயலாளர்கள் எம்.ஆர்.ஆர்.முஸ்தபா கவுன்சிலர்கள் அம்பிகாபதி, அரவிந்தன் உள்பட ஏராளமான நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *