திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் எய்ட்ஸ் மற்றும் எச்ஐவி குறித்த விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த பேரணியானது திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து தொடங்கி ராஜா காலனி வழியாக மேஜர் சரவணன் ரவுண்டானா, ஐயப்பன் கோவில் சாலை வழியாக சென்று திருச்சி அரசு தலைமை மருத்துவமனையில் நிறைவடைந்தது.

 இந்த விழிப்புணர்வு பேரணியில் பயிற்சி செவிலியர்கள் கல்லூரி மாணவ மாணவிகள் பேராசிரியர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு எய்ட்ஸ் மற்றும் எச்ஐவி குறித்த விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்தியவாறு பேரணியாக சென்றனர். முன்னதாக திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் பிரதீப் குமார் எய்ட்ஸ் மற்றும் எச்ஐவி குறித்த விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய ஸ்டிக்கர்களை வாகனங்களில் ஒட்டி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்