பெட்ரோல் டீசல் உள்ளிட்ட எரிபொருட்களின் விலை உயர்வை கண்டித்தும் அவைகள் மீதான அதிகப்படியான வரிவிதிப்புகளை ரத்து செய்ய வலியுறுத்தி ஜூன் 10ம் தேதி தமிழகம் முழுவதும் எஸ்டிபிஐ கட்சியின் சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதன் ஒரு பகுதியாக திருச்சி மாவட்ட எஸ்டிபிஐ கட்சியின் சார்பாக பாலக்கரை ரவுண்டானா அருகில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் மாவட்ட தலைவர் இமாம் ஹஸ்ஸான் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

மக்கள் கொரானா பெருந்தோற்றுடன் போராடிக் கொண்டிருக்கும் இந்த வேளையில் தற்போது விலைவாசி உயர்வுடனும் போராட வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது. கொரானா தொற்று காரணமாக நாட்டின் வர்த்தகம், பொருளாதாரம், வேலைவாய்ப்பு என அனைத்தும் மோசமான நிலையிலும், விலைவாசி உயர்வுக்கு காரணமான பெட்ரோல் டீசல் விலை அதிகரித்து வருவதை மத்திய பாஜக அரசு வேடிக்கை பார்த்துக் வருகிறது.கொரானா பெருந்தோற்று ஏற்பட்டுள்ள இந்த நெருக்கடியான காலகட்டத்தில் வாழ்வாதாரத்திற்கும் பெருந்தொற்றிலிருந்து தப்பிக்கவும் மக்கள் போராடும் இந்த நிலையில் பெட்ரோல் டீசல் விலை உயர்வு என்பது பெரிய அடியாகயுள்ளது. ஆகையால் பெட்ரோல் டீசல் விலையை திரும்ப பெற வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட பொதுச் செயலாளர் நியமத்துல்லா, மாவட்ட செயலாளர் முபாரக் அலி, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஏர்போர்ட் மஜித், தளபதி அப்பாஸ், ஐமால் மற்றும் பாலக்கரை ஆழ்வார்தோப்பு பகுதி நிர்வாகிகளும் மேற்கு தொகுதி நிறுவாகிகளும், பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் முககவசம் அணிந்து, சமூக இடைவெளியுடன் கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர்.

Leave a Reply

Your email address will not be published.