தமிழ்நாடு ஏஐடியுசி கட்டட கட்டுமான தொழிலாளர் சங்கம் சார்பில் டிசம்பர் 7ல் கோரிக்கை மாநாடு சென்னையில் மாநில அளவில் நடைபெற உள்ளது. மாநாட்டில் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வெ. கணேசன் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் ஏஐடியுசி மாநில தலைவர் சுப்பராயன் பொதுச் செயலாளர் மூர்த்தி கட்டுமான சங்க மாநில தலைவர் பெரியசாமி பொதுச் செயலாளர் இரவி மற்றும் சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்கிறார்கள்.

கட்டுமான தொழிலாளர்களின் மாநாட்டையொட்டி டிசம்பர் 4 மற்றும் 5 தேதிகளில் தமிழகம் முழுமையும் ஆட்டோ பிரச்சாரம் நடைபெறுவதையொட்டி திருச்சி மாநகர் எடமலைப்பட்டிபுதூர் பெயிண்டர் பிரிவின் கிளை துணை தலைவர் செந்தில் தலைமையில் டிச4இரவு7மணிமுதல்9மணிவரை நடைபெற்ற பிரச்சார பேரியக்கத்தினை திராவிட முன்னேற்ற கழகத்தின் மத்திய மாவட்ட துணை செயலாளர் முத்துச்செல்வம் துவக்க உரையாற்றினார். திருச்சி மாவட்ட ஏஐடியுசிசி தலைவர் நடராஜா பொதுச்செயலாளர் சுரேஷ் மற்றும் கிளை நிர்வாகிகள் செயலாளர் சங்குகநாதன் பொருளாளர் ராஜ்குமார், மொசைக் மோகன் உள்ளிட்டோரும் உரையாற்றினார். திருச்சி மாநகர்39 மற்றும் 40வது வார்டுகளில் மக்கள் மத்தியில் ஆட்டோ பிரச்சார இயக்கம் நடைபெற்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *