திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்திற்கு இளம்பெண் ஒருவர் தனது தாயாருடன் கண்ணீர் மல்க மனு அளிக்க வந்தார்.  

இதுகுறித்து இளம்பெண் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

 

திருச்சி திருவெரம்பூர் காந்திநகர் பகுதியை சேர்ந்த கார் டிரைவர் குமார் இவரது மனைவி ஜீவிதா இவர்களுக்கு 2 மகள்கள் மூத்தமகள் திருமணமாகி வெளியூரில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இளைய மகள் சுவாதி வயது 21 பத்தாம் வகுப்பு வரை படித்துள்ளார். இதே பகுதியை சேர்ந்த தனியார் கார் ஓட்டுனரான பிரேம்குமார் வயது 25 என்பவரை கடந்த 2019ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார். சொந்தமாக கார் வாங்க வேண்டும் என்பதற்காக சுவாதியின் தாயாரிடம் 6 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் கடன் வாங்கி கார் வாங்கியுள்ளார். கடந்த ஆண்டு யாரிடமும் சொல்லாமல் காரை விற்று வந்த பணத்தை செலவழித்து விட்டதில் காதல் கணவன் குமாருக்கும் சுவாதிக்கும் சண்டை எழுந்துள்ளது.

இதுகுறித்து சுவாதியின் தாயார் ஜீவிதா பிரேம்குமாரிடம் கடன் பணத்தை கேட்டதற்கு, வெளியூர் சென்று சம்பாதித்து கடனை அடைப்பதாக கூறி விட்டு வெளியே சென்ற பிரேம்குமார் கடந்த 6 மாதமாக வீட்டிற்கு வரவில்லை. இந்நிலையில் இரண்டு மாதங்களுக்கு முன்பாக ராமநாதபுரம் பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவரை திருமணம் செய்துவிட்டு தற்போது பெங்களூரில் வேலை பார்த்து வருவதாக தகவல் கிடைத்தது. இதுகுறித்து அவரிடம் கேட்டதற்கு என்னையும் (சுவாதி) எனது தாயாரையும் கொலை செய்துவிடுவதாக மிரட்டல் விடுத்தார். இதுகுறித்து திருவெறும்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தேன். புகார் மீது எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படாததால் இன்று காலை திருச்சி மாவட்ட கலெக்டரிடம் மனு அளிக்க எனது உடல்நிலை சரியில்லாத தாயாருடன் மனு அளிக்க வந்துள்ளேன் என கண்ணீர் மல்க தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்