தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ். அழகிரி திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் பேசுகையில்:-,

பா.ஜ.க இந்து சமய அற நிலையத்துறையை கலைக்க வேண்டும் என்கிறார்கள். அந்த துறை முன்பை விட சிறப்பாக செயல்படுகிறது. அதை கலைக்க கூறுவது சனாதன தர்மம். பிறமத வழிப்பாட்டு தலங்களில் அனைவரும் சென்று வழிபடலாம் ஆனால் இந்து கோவில்களில் சில சமூகத்தினர் மட்டுமே வழிபடும் முறை இருந்தது.அதை ஒழித்து அனைத்து சமூகத்தினரையும் கோவிலில் செல்ல காரணமாய் இருந்தது இந்து சமய அறநிலையத்துறை தான். சனாதானத்தை அழித்து சமதர்மத்தை கொண்டு வந்தது அந்து துறை தான் .அதை கலைக்க கூறும் பா.ஜ.க வின் கருத்து கண்டிக்கத்தக்கது. பா.ஜ.க 60 ஆண்டுகள் இல்லாத வேறுபாட்டை உருவாக்கி உள்ளது. கட்சியாக மட்டுமல்லாமல் அரசாங்கமே அதை உருவாக்குகிறது. இது அரசியலமைப்புக்கே எதிரானது.மத ரீதியாக மக்களை பிரிக்கிறது.ஆனால் பகுஜன் சமாஜ் கட்சி, சமாஜ்வாடி கட்சியை ஜாதி பாகுபாட்டை உருவாக்குகிறார்கள் என பா.ஜ.க குறை கூறுவது நியாமானதல்ல. பத்தாண்டு கால அ.தி.மு.க ஆட்சியில் வெளிப்படைத்தன்மை இல்லை.தி.மு.க ஆட்சியில் வெளிப்படைத்தன்மை இருக்கிறது. தி.மு.க ஆட்சிக்கு வந்தவுடன் பெட்ரோல் விலையை ரூ.3 குறைத்தது. அப்பொழுதெல்லாம் பா.ஜ.க பெட்ரோல், டீசல் விலையை குறைக்கவில்லை. இடைத்தேர்தல் தோல்விக்கு பின் தான் அதை குறைத்தார்கள்.

அ.தி.மு.க வீழ்ச்சி அடைந்ததற்கு காரணம் பா.ஜ.க வுடன் நெருக்கமானது தான்.அவர்களை எதிர்த்து தான் அதிமுக போராட வேண்டும். கடந்த 10 ஆண்டுகளில் விவசாயிகளின் நிலையை நபார்டு வங்கி புள்ளி விவரமாக வெளியிட்டுள்ளார்கள் .அதன் படி விவசாயின் மாத வருமானம் 9775 ரூபாய் தான் சராசரி கடன் சுமை 65% சராசரி கடன் ரூ.1,00,266 தேசிய சராசரி ரூ.75,000 இதுதான் தமிழக விவசாயிகளின் நிலை. விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காக்க தமிழ்நாடு அரசு விவசாய விளை பொருள் ஆணையத்தை உருவாக்க வேண்டும், விவசாயத்தை மட்டும் தொழிலாளாக கொண்டுள்ள விவசாய குடும்பத்தினருக்கு மாதம் 1000 ரூபாய் ஊக்கத்தொகை வழங்க வேண்டும். தமிழ் தாய் வாழ்த்தை மாநில அரசின் பாடலாக அறிவித்ததற்கு முதலமைச்சருக்கு நன்றி. நீட் விவாதம் முறையாக நடைபெறவில்லை. தமிழகம், மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களில் மட்டும் தான் நீட்டிற்கு எதிர்ப்பு இருக்கிறது. எல்லா மாநிலங்களிலும் எதிர்ப்பு இல்லை. நமக்கான பாடத்திட்டத்தை நாமே வகுத்த காரணத்தால் தான் நாம் கல்வியில் சிறந்து இருக்கிறோம். கிராமப்புற, ஏழை மாணவர்களால் நீட் பயிற்சி பெற்று வெற்றி பெற முடியாது. அதை மத்திய அரசும் புரிந்து கொள்ளவில்லை ,நீட்டை ஆதரிப்பவர்களும் புரிந்து கொள்ளவில்லை. இது அரசியல் பிரச்சனை அல்ல, மாணவர்களின் பிரச்சனை வட இந்திய மாநில தேர்தல்களில் வெற்றி பெற்றால் நாட்டை ஆட்சி செய்யலாம். எனவே தான் தேர்தல் பிரச்சாரத்தில் என்ன வேண்டுமானாலும் பிரதமர் பேசுகிறார். இந்தியா ஏழை நாடு இங்கு 21 வயது வரை திருமணம் செய்யாமல் பெண்களை வைத்திருப்பது சிரமம். அதே நேரத்தில் பெண்கள் உடல் நிலைக்கு 21 வயது என்பது நல்லது .எனவே பெண்கள் திருமண வயதை 21 வயதாக உயர்த்தி சட்டமாக இயற்றாமல் அதை பிரச்சாரமாக செய்யலாம்.

தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் அழகிரி பேட்டியின் போது.‌ அருகில் திருச்சி மாநகர மாவட்ட தலைவர் ஜவஹர், திருச்சி தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி மாவட்ட தலைவர் கோவிந்தராஜன், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில பொதுச் செயலாளர் வக்கீல் சரவணன் ஆகியோர் உள்ளனர். 

2024 ஆம் ஆண்டு தி.மு.க ஆட்சி கலைக்கப்படும் என எடப்பாடி பழனிச்சாமி கனவு காண்கிறார். அவ்வாறெல்லாம் ஒரு அரசை கலைக்க முடியாது.தமிழ்நாடு போல் பல நாடுகள் கலந்தது தான் இந்திய தேசம். ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது பல்வேறு கலாச்சாரங்களை அழிப்பது.அதை தான் பா.ஜ.க செய்கிறார்கள். இதை பழனிச்சாமி தெரிந்து பேசுகிறாரா என்பது தெரியவில்லை. இந்தியா ஒவ்வொரு கலாச்சாரத்தையும் அங்கீகரித்துள்ளோம். அதை அழிக்கவே பா.ஜ.க முயற்சிக்கிறது. திமுக அரசு மோடி அரசுக்கு எதிராக தான் இருக்கிறார்கள். நாடாளுமன்றத்திற்குள்ளும் வெளியேயும் பா.ஜ.க அரசை திமுக அரசு எதிர்த்து வருகிறது அதுதான் முக்கியம். மக்கள் நலனுக்கு எதிராக செயல்பட்டால் நிச்சயம் மோடி அரசை எதிர்ப்பார்கள். சமரசமற்று தி.மு.க தங்கள் கொள்கையை முன்வைத்து வருகிறார்கள். தி.மு.க வை விமர்சிக்கும் வகையில் மேடையில் சீமான் செருப்பை காட்டி பேசியிருப்பது என்பது அவ்வாறெல்லாம் சீமான் செய்யாமல் இருந்ததால் தான் வியப்படையனும்.அவர் செய்வதில் வியப்பில்லை. ஆளுநர் பதவி என்பது மாநில அரசுக்கு உதவி செய்யத்தான். தனக்கு ஏற்படும் சந்தேகத்தை தலைமை செயலாளரிடமோ, டிஜிபி யிடமோ ஆளுநர் கேட்கலாம் அது தவறு கிடையாது. ஆனால் ஒரு இடத்தில் அமர்ந்து கொண்டு கோப்புகளை பார்வையிடுவதோ, ஆய்வு செய்வதோ கூடாது. குன்னூர் ஹெலிக்காப்டர் விபத்தில் தமிழக அரசின் செயல்பாட்டிற்கு நூறு மதிப்பெண் பா.ஜ.க தலைவர் அண்ணாமலை கொடுத்துள்ளார். இதையே காங்கிரஸ் கட்சி கூறினால் எப்பொழுது காங்கிரஸ் கட்சியை திமுக வுடன் இணைக்க போகிறீர்கள் என அண்ணாமலை கேட்கிறார். தற்போது திமுக வை பாராட்டி உள்ள அண்ணாமலை எப்பொழுது தங்கள் கட்சியை தி.மு.க வோடு இணைக்கப்போகிறார் என்பதை கேட்டு சொல்லுங்கள். அடிப்படை ஆதாரம் இல்லாமல் முன்னாள் அமைச்சர்கள் மீது சோதனை நடத்தப்படாது. அவ்வாறு நடத்தப்படும் சோதனைகளை சட்டப்பூர்வமாக எதிர்கொள்ள வேண்டுமே தவிர ஓடி ஒளிவதோ, சோதனையை காழ்ப்புணர்ச்சி என கூறுவதோ தவறு என கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *