தேசிய அளவிலான ஏரோஸ்கேட்டோபால் சாம்பியன்ஷிப் போட்டியில் ஆண்கள்,பெண்கள் பிரிவு என மொத்தம் ஆறு பிரிவுகளில் தமிழ்நாடு ஸ்கேட்டிங் அணியினர் முதலிடம் பிடித்து தங்கப் பதக்கங்களை பெற்றுள்ளனர். மகாராஷ்டிரா மாநிலத்தில் எட்டாம் ஆண்டு தேசிய அளவிலான ஏரோஸ்கேட்டோபால் சாம்பியன்ஷிப் ஜனவரி 28 மற்றும் 29ஆம் தேதி நடைபெற்றது, மகாராஷ்டிரா, தமிழ்நாடு, ராஜஸ்தான், கேரளா, குஜராத் என பத்துக்கும் அதிகமான மாநிலங்கள் பங்கு கொண்ட இந்த தேசிய விளையாட்டு போட்டியில், தமிழ்நாடு ஏரோஸ் கேட்டோபால் சங்கத் தலைவர் ராகேஷ் சுப்ரமணியன் தலைமையில், பொதுச் செயலாளர் பிரவீன் ஜான்சன் மற்றும் பொருளாளர் தங்க முருகன் மேற்பார்வையில் திருச்சி, திண்டுக்கல், கள்ளக்குறிச்சி, கோயம்புத்தூர், மதுரை, தர்மபுரி என பல மாவட்டங்களில் இருந்து 17 பெண்கள், 57 ஆண்கள் என மொத்தம் 74 ஸ்கேட்டிங் வீரர்கள், வீராங்கனைகள் தமிழ்நாடு அணையில் விளையாடினர்.

10 வயதுக்கு உட்பட்ட ஆண்கள், பெண்கள் பிரிவு, 14 வயதுக்குட்பட்ட ஆண்கள், பெண்கள் பிரிவு, 14 வயதுக்கு மேல் உள்ள ஆண்கள், பெண்கள் பிரிவு என மொத்தம் ஆறு பிரிவுகளில், தமிழ்நாடு ஸ்கேட்டிங் அணியினர் முதலிடம் பிடித்து தங்கப்பதக்கங்களை பெற்றுள்ளனர். மேலும் பல மாநிலங்கள் பங்கு பெற்ற இந்த தேசிய விளையாட்டு போட்டியில் ஒட்டுமொத்த தேசிய அளவிலான சாம்பியன்ஷிப் கோப்பையை தமிழ்நாடு அணியினர் வென்று சாதனை படைத்துள்ளனர். வெற்றிக்கு பெரிதும் துணை நின்ற பயிற்சியாளர்கள் அபுதாஹீர், அருள் பிரகாஷ், அமல் ஜோயல், வினோத் மற்றும் பொருளாளர்கள் யோகா, ஸ்வர்ணா, கார்த்திகேயன் மற்றும் வீரர்கள், வீராங்கனைகள் என அனைவரையும் பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் பூங்கொத்து கொடுத்து உற்சாகமாக வரவேற்று, இனிப்புகள் வழங்கி பாராட்டி மகிழ்ந்தனர்.

அப்போது தலைவர் ராகேஷ் சுப்ரமணியன் கூறுகையில், ஸ்கேட்டிங் விளையாட்டில் எரோஸ் கேட்டோபால் விளையாட்டினை அங்கீகரித்து தேசிய அளவில் தமிழ்நாட்டு சார்பாய் எழுபத்தி நான்கு மாணவர்கள் பங்கு பெறச் செய்து விளையாடி வெற்றி பெற்று திரும்பி வர துணை புரிந்த தமிழக அரசுக்கு தமிழ்நாடு எரோஸ்கேட்டோபால் சங்கத் தலைவர் ராக்கேஷ் சுப்பிரமணியன் மனமார நன்றி தெரிவித்துக்கொண்டார்.

தொடர்ந்து இரண்டாம் முறை தேசிய அளவிலான ஹெரோஸ்கேட்டோபால் தேசிய விளையாட்டுப் போட்டியில் தமிழ்நாடு சார்பாக 50க்கும் அதிகமான மாணவர்களை திறம்பட விளையாடச் செய்து தமிழ்நாடு எரோஸ்கேட்டோபால் சங்கம் வெற்றி பெற செய்துள்ளது, திருச்சி மாவட்டத்தில் வீரர்கள், வீராங்கனைகள் விளையாடி இன்னும் திறம்பட பயிற்சி பெற, ஸ்கேட்டிங் தளம் ஒன்றை தமிழ்நாடு அரசு அமைத்து தருமாறு எரோஸ் கேட்டோபால் சங்கத் தலைவர் ராகேஷ் சுப்பிரமணியன் மிகவும் பணிவுடன் வேண்டிக் கேட்டுக் கொண்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *