திருச்சி பெல் (BHEL) நிறுவன வளாகத்தின் முன் சுமார் 4000 சதுர அடியில் மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் முழு உருவ வெண்கல சிலையை முன்னாள் முதல்வரும் அதிமுகவின் பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி இன்று மாலை திறந்து வைத்து சிறப்புரையாற்றினார்.
அதனைத் தொடர்ந்து சர்வதேச திருச்சி விமான நிலையத்திலிருந்து சென்னை செல்வதற்காக இரவு 9:30 மணி அளவில் திருச்சி விமான நிலையம் வந்தடைந்தார். அவருக்கு ஆவின் சேர்மன் கார்த்திகேயன் மற்றும் அதிமுக நிர்வாகிகள் வழி அனுப்பி வைத்தனர்.
அப்போது அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி சென்ற விஐபி அரை முன்பாக மர்ம பேக் ஒன்று நீண்ட நேரமாக கேட்பாரற்று கிடந்தது. இதனை கண்ட மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்கள் அந்த மர்ம பேக் யாருடையது என விசாரணை மேற்கொண்டனர். அதனைத் தொடர்ந்து மத்திய தொழில் பாதுகாப்பு படையை சேர்ந்த சிறப்பு பிரிவு மோப்ப நாய் வெற்றி வரவழைக்கப்பட்டு சோதனை மேற்கொள்ளப்பட்டது அதனைத் தொடர்ந்து அந்த மர்ம பேகை மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்கள் எடுத்துச் சென்றனர்.
முன்னதாக கேட்பாரற்று கிடந்த இந்த மர்ம பேக்கில் வெடிபொருட்களோ அல்லது பணம் நகையோ இருக்கலாம் என அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் விமான நிலையம் அந்த பயணிகள் மத்தியில் பெரும் பரபரப்பையும், சலசலப்பையும் ஏற்படுத்தியுள்ளது.