சிங்கப்பூரிலிருந்து இண்டிகோ விமானம் மூலம் திருச்சி வந்த விமான பயணிகளிடம் திருச்சி விமான நிலைய வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத் துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது ஆண் பயணி ஒருவர் ஏர் டை கிரைண்டர் மிஷினிலும், மற்றொரு ஆண் பயணி LED லைட்டிலும் மறைத்து வைத்து கடத்தி எடுத்து வந்த ரூ.9 லட்சத்து 54 ஆயிரம் மதிப்புள்ள 207 கிராம் தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.