திருச்சிராப்பள்ளி விமான நிலையத்திற்கு நேற்று கோலாலம்பூரிலிருந்து வந்த விமானத்தில் பயணம் செய்த பயணிகளை விமான நிலைய வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர் அப்பொழுது பயணி ஒருவர் மலக்குடலில் மறைத்து வைத்து கடத்தி வந்த 61 லட்சத்தி 21 ஆயிரத்து 500 மதிப்புள்ள 1 கிலோ 60 கிராம் தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

அதே விமானத்தில் பயணம் செய்த மற்றொரு குடும்பத்தினரை (கணவன் மனைவி இரண்டு குழந்தைகள்) சோதனை செய்தபோது அவர்கள் தங்கள் குழந்தைகளின் ஷு மற்றும் குழந்தைகளின் உள்ளாடையில் மறைத்து வைத்து கடத்தி வந்த ரூபாய் 1 கோடியே 8 லட்சத்தி 10 ஆயிரத்து 800 மதிப்புள்ள 1 கிலோ 872 கிராம் தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர் நேற்று ஒரே நாளில் திருச்சி விமான நிலையத்தில் மொத்தம் ரூபாய் 1 கோடியே 69 லட்சத்தி 32 ஆயிரத்து 300 மதிப்புள்ள இரண்டு கிலோ 932 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டு அவர்களிடம் சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *