மலேசிய தலைநகர் கோலாலம்பூரிலிருந்து சர்வதேச திருச்சி விமான நிலையத்திற்கு வந்த பயணிகளை வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.
அப்போது சந்தேகத்திற்கு இடமாக வந்த பயணிகள் இருவரின் சூட்கேசில் பேஸ்ட் வடிவில் மறைத்து வைத்து கடத்தி வந்த 1188 கிராம் எடை கொண்ட 71.72 லட்சம் மதிப்பிலான தங்கத்தை வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும் இருவரிடமும் சுங்கத்துறை அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.