வணிகர் சங்கங்களின் பிரதிநிதிகளுடனான கலந்தாய்வு கூட்டம் திருச்சியில் இன்று நடைப்பெற்றது. இந்த கூட்டத்தில் நகர் புற வளர்ச்சி துறை அமைச்சர் கே.என்.நேரு,வணிக வரி மற்றும் பதிவு துறை அமைச்சர் மூர்த்தி,பிற்படுத்தப்பட்டோர் நல துறை அமைச்சர் சிவசங்கர்,சட்டத்துறை அமைச்சர் ரகுபதி,சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன்,சட்டமன்ற உறுப்பினர்கள், வணிக வரி துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மூர்த்தி,

அரசுக்கு வருவாய் அதிகரிக்கும் வகையில் தவறாக தொழில் செய்பவர்களை கண்டறிந்து அதை தடுக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறோம்.அதே போல ஜி.எஸ்.டி யில் உள்ள குறைகளை களைந்து வணிகர்கள் முறையாக வரி செலுத்தவும் நடவடிக்கைகள் எடுத்து வருகிறோம்.பத்திரப்பதிவு துறையில் அங்கீகரிப்படாத வீட்டு மனைகளை பதிவு செய்ய கூடாது இடைத்தரகர்கள் இல்லாமல் பதிவு செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டை விட இந்தாண்டு வணிக வரி துறை மற்றும் பதிவுத்துறையில் நிச்சயம் வரி வருவாய் அதிகரிக்கும்.கடந்த பத்தாண்டு காலம் வணிகர் நல வாரியம் அமையாமல் இருந்தது.தற்போது விரைவில் வணிகர் நல வாரியம் அமைக்கப்படும்.தேர்தல் அறிக்கையில் முதலமைச்சர் அறிவித்ததை படிப்படியாக அமல்படுத்தி வருகிறார். பெட்ரோல்,டீசல் மீது அதிக வரியை ஒன்றிய அரசு வசூலிக்கிறது.அதை குறைக்க வலியுறுத்தி வருகிறோம்.ஒன்றிய அரசு சொல்வது ஒன்றாகவும் செய்வது ஒன்றாக இருக்கிறது.தி.மு.க வின் தேர்தல் அறிக்கையில் அறிவித்த வாக்குறுதிகளை ஒன்றொன்றாக முதலமைச்சர் நிறைவேற்றுவார்.பத்திரப்பதிவு செய்ய டோக்கன் முறையை அறிமுகப்படுத்தி உள்ளோம்.இன்னும் ஒரு மாத காலத்தில் பத்திரப்பதிவு துறை அலுவலகத்தில் நீண்ட நேரம் மக்கள் காத்திருக்கும் நிலை இருக்காது.வணிகர் நலனுக்கு எதுவெல்லாம் நடைமுறை சாத்தியமாக இருக்குமோ அதை ஒன்றிய அரசின் கவனத்திற்கு கொண்டு செல்வோம்.கடந்த காலத்தில் ஆள் மாறாட்டம் செய்து போலியாக பத்திரங்கள் பதிவு செய்தது உண்மை ஆனால் தற்போது அது போன்ற தவறுகள் நடைபெறாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. வணிகர் நல வாரியத்தில் எந்த வணிகர் வேண்டுமானாலும் உறுப்பினராக இணையலாம் என்றார்.

Leave a Reply

Your email address will not be published.