இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் மாணவர் அமைப்பின் கூட்டம் திருச்சியில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது – இதில் கலந்து கொண்ட தமிழ்நாடு இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் தேசிய தலைவர் காதர் மொய்தீன் செய்தியாளர்களை சந்தித்தார் : – பா.ஜ.கவின் மீது நம்பிக்கை மக்களுக்கு நாளுக்கு நாள் குறைந்து வருகிறது – அந்த பயத்தில் தான் இந்தியா கூட்டணி வழுக்குறைகிறது என்கின்றனர்.

இந்தியா கூட்டணி ஏதோ ஊராட்சி அல்லது சட்ட பேரபை தேர்தலுக்குகாக உருவாக்கப்பட்டது அல்ல – ஒரே நோக்கம் பிஜேபியை அகற்றி எல்லா கூட்டணி கட்சிகளும் வெற்றி பெற்று பிரதமரை தேர்வு செய்ய வேண்டும். கூட்டணி பேச்சுவார்த்தை குறித்து : 5 வது இடத்தில் நாங்கள் உள்ளோம் – வரிசைபடி கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெறும். விஜய் அரசியல் வருகை குறித்து :

தமிழகத்தில் இருந்து 3 ஆயிரம் கட்சிகள் தேர்தல் ஆணையத்தில் பதிவாகி இருக்கிறது – தமிழ் … தமிழகம் என்கிற பெயரில் 21 கட்சி உள்ளது. பெயரை வைத்து – நடிகர் என்பதை வைத்து தமிழகத்தில் அரசியலை முடிவு செய்ய முடியாது*திடீர் என வந்து யாரும் எதையும் செய்து விட முடியாது – தம்பி விஜய்க்கு வாழ்த்துகள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *